மீண்டும் ஜார்ஜியா செல்லும் பீஸ்ட் படக்குழு

நடிகர் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2021, 10:57 AM IST
மீண்டும் ஜார்ஜியா செல்லும் பீஸ்ட் படக்குழு title=

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தினை பற்றிய அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே எதிரிபார்ப்பு அதிகமாகி உள்ளது. முன்னணி இயக்குனர்களை விட்டு விலகி தற்போது இளம் இயக்குனர்களுடன் தொடர்ந்து படம் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.  

கடந்த பொங்கல் தினத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் (Actor Vijay) நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனாவிற்கு பின் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது ஜார்ஜியாவில் தொடங்கிய பீஸ்ட் (Beast) படத்தின் ஷூட்டிங் சென்னை, டெல்லி என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது ஷாப்பிங் மால் ஒன்றின் செட் அமைத்து, அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். 

ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்

beast

இந்நிலையில்  மீண்டும் ஜார்ஜியா செல்லவிருக்கிறது பீஸ்ட் படக்குழு எனத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதன்படி 80 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்ட சண்டைக் காட்சியைப் படமாக்குவதற்காக மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்து இருக்கிறார். 

இதற்கிடையில் நடிகர் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக் வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News