மார்க் ஆண்டனி படம் யுவிஷால், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார் . படத்தில் செல்வரகவன், ரெடின் கிங்ஸ்லி, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு தடை..?
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தி இருந்தது. அந்த தொகையை முழுவதுமாக திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக்வும் அதை மீறி வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தனி நீதிபதி 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த தொகையை திருப்பி செலுத்தா விட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளிலோ அல்லது ஓடிடி தளங்களிலோ வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டது.
மேலும் படிக்க | ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்காரா..? அதுவும் இந்த படத்திலா..!
இந்த வழக்கின் விசாரணை வரும் 12 ஆம் தேதி நடக்கிறது, இதற்காக விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு தடை விதித்தும் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருபக்கம் இருக்க, மார்க் ஆண்டனி படக்குழு ஒரு பக்கம் விறுவிறுப்பாக படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறது. இதையடுத்து இன்று விஷால் ஃபிலிம் ஃபேக்டரி, தங்களது ட்விட்டர் பக்கத்தில் மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளது.
#MarkAntony Censored with U/A
Releasing WORLDWIDE in Theatres from Sep 15#MarkAntonyCensoredUA #MarkAntonyFromSep15#WorldOfMarkAntony pic.twitter.com/C0GadaU9Ei
— Vishal Film Factory (@VffVishal) September 10, 2023
படம் சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்திற்கு தடையா இல்லையா..?
மார்க் ஆண்டனி படத்திற்கு தடை என்ற செய்தி வெளியானவுடன் அப்படத்தின் தயாரிப்பாளர் விநோத் குமார் ஒரு ட்வீட்டினை வெளியிட்டிருந்தார். அதில், விஷால் கோர்டில் ஆஜராகவில்லை என்றால் மட்டுமே தடை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் விஷால் வரும் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தோல்வி படங்களே கொடுக்காத ‘அந்த’ 4 தமிழ் இயக்குநர்கள்..! யார் யார் தெரியுமா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ