Budget 2025, Two Wheeler Tax Reduction Expectations: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப். 1ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்று முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடந்த ஜூலை 23ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் 2025: பிப்.1ஆம் தேதி தாக்கல்
இந்நிலையில், வரும் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வரும் ஜன. 31ஆம் தேதி அன்று கூடுகிறது. ஜன. 31ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். பிப். 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஏப். 4ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2025: வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் இரண்டு நல்ல செய்திகள், விவரம் இதோ
பட்ஜெட் 2025: சாதனையை நோக்கி நிர்மலா சீதாராமன்
குறிப்பாக, இது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் 8வது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும். அதாவது, இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் 6 முழு பட்ஜெட் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். இதன்மூலம், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயை விட அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெறுவார்.
பட்ஜெட் 2025: மக்களின் எதிர்பார்ப்பு
இவை ஒருபுறம் இருக்க, இந்த பட்ஜெட்டின் மீது பல்வேறு துறை சார்ந்தவர்களும், பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் வருமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், வரிச்சுமையை குறைத்து வரி சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படுமா என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், மக்களின் வாங்கும் திறன் அதிகமாகி, நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் வாய்ப்புள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் இந்தாண்டும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் 2025: பைக் ஆடம்பரம் இல்லை
இந்நிலையில், இருச்சக்கர வாகன தயாரிப்பாளர்களும் இந்த 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். நாட்டில் தற்போது இருச்சக்கர வாகனங்களுக்கு கடும் தேவைகள் இருப்பதால், அதற்கான வரிகளையும் குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க | Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ், பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா?
"தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில், இரு சக்கர வாகனங்கள் என்பது ஆடம்பரப் பொருளாக இல்லை, அத்தியாவசியமாகிவிட்டது. எனவே, இந்த வாகனங்களுக்கான வரிகளைக் குறைக்க வேண்டும்" என இந்திய ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் இயக்குநர் யோகேஷ் மாத்தூர் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
பட்ஜெட் 2025: டூ-வீலருக்கு வரி எவ்வளவு?
இருச்சக்கர வாகனங்களை பொறுத்தவரை தற்போது, 350சிசி வரை எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் 350 சிசி அளவுக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களுக்கு 3% செஸ் வரியும் வசூலிக்கப்படுகிறது. அதாவது, இந்த வரி நடைமுறையால் 350 சிசி அளவுக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மொத்த வரி 31% ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
2024இல் குறைந்த பைக் விற்பனை...!
அந்த வகையில், யோகேஷ் மாத்தூர் தெரிவித்த கருத்து உற்றுநோக்கப்பட வேண்டியதாகிறது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க, வருமான வரியை குறைக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் (2024-25), ஸ்கூட்டர்களின் விற்பனையை ஒப்பிடும்போது பைக்குகளின் விற்பனை சிறப்பாக செயல்படவில்லை. தாமதமான பருவமழை உள்ளிட்ட பல காரணிகளால் கிராமப்புறங்களில் ஆர்வம் குறைந்ததே இதற்கு காரணம்" என்கிறார் அவர்.
மேலும் அவர்,"ஜிஎஸ்டி நடைமுறையின் கீழ் இரு சக்கர வாகனங்கள் ஆடம்பரமான பொருள்கள் அல்ல என்பதால், அதை அரசு கவனித்துக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இருச்சக்கர வாகனங்கள் நமது மக்களின் போக்குவரத்து அவசியமான ஒன்றாகும்.
பட்ஜெட் 2025: 28% ஜிஎஸ்டி வரி கூடாது... ஏன்?
இந்தியாவில் இன்னும் முழுமையான போக்குவரத்து இணைப்பு இல்லை. அந்த விதத்தில் இரு சக்கர வாகனங்கள் இன்னும் அத்தியாவசியமாகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இரு சக்கர வாகனங்களுக்கு 28% வரி விதிக்கக்கூடாது. இதுதான் எங்கள் துறையின் கோரிக்கையாகும்" என்றார்.
அதாவது, பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து இல்லாத இடங்களும் அதிகம் இருப்பதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு இருச்சக்கர வாகனம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமானது என்றும் இதனை கருத்தில் கொண்டு அரசு இருச்சக்கர வாகனங்களின் மீதான வரியை குறைக்க வேண்டும் என்பதே அவர் கூறுவதின் சாராம்சம்.
மேலும் படிக்க | Budget 2025: PF உறுப்பினர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியுஸ்? அதிகரிக்கும் ஓய்வூதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ