கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குட் நியூஸ்..! இந்த ஆவணம் இணைக்க தேவையில்லை..!

Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற வருமானவரிச் சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டுமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு (Kalaingar Magalir Urimai Thogai) விண்ணப்பிக்கும்போது குடும்ப வருமானம் குறித்து தெரிவிக்க வருமானச் சான்றிதழ் அவசியம் இணைக்க வேண்டுமா? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

1 /7

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அண்மையில் துணை முதலைமச்சர் அறிவித்தார். 

2 /7

அதன்படி, கடந்த முறை விட்டுப்போன தகுதி வாய்ந்த பெண்களுக்கு இம்முறை கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. அதனால் அரசு சொல்லும் தேதியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அந்த பெண்களும் மீண்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

3 /7

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கும் பெண்கள் அனைவரது வீடுகளுக்கும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடி கள ஆய்வு செய்வார்கள். அப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும்.

4 /7

குடும்ப வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது. 10 ஏக்கருக்கு மிகாமல் புன்செய் நிலங்கள், 5 ஏக்கருக்கும் மிகாமல் நன்செய் நிலங்கள் வைத்திருக்கக்கூடாது. ஆண்டுக்கு வீட்டு மின்சார உபயோகம் 3600 யூனிட்டிற்கும் மிகாமல் பயன்படுத்தக்கூடாது. 

5 /7

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குடும்ப வருமானத்துக்கு தனியாக வருமானச் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. நில ஆவணங்களுக்கும் புதிய ஆவணங்கள் எதையும்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதிகாரிகளின் கள ஆய்வில் அவர்கள் உறுதிபடுத்திக் கொள்வார்கள்.

6 /7

ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர். சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு இந்த திட்டத்தில் பணம் கிடைக்காது. விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

7 /7

இதனை தவிர்த்து மேலே சொன்ன விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும், 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செய்வோர் குடும்பத்துக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. எனவே, இந்த திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்,