UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகம்; அரசு வெளியிட்டுள்ள தகவல்

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளிலும், இந்தியத் தொழிலாளர்கள் இறப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன என மத்திய அரசு கூறியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 24, 2022, 02:57 PM IST
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2020ம் ஆண்டில் 2,454 இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
  • தொற்றுநோயைத் தவிர தொழிலாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நெருக்கடிகளும் ஏற்பட்டது.
  • ஐரோப்பிய நாடுகளில், இத்தாலி மற்றும் ஜெர்மனியிலும் அதிக எண்ணிக்கையிலான இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகம்; அரசு வெளியிட்டுள்ள தகவல் title=

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜி.சி.சி) உறுப்பு நாடுகளில், 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், தொற்றுநோய் பருவத்தில், அதிக அளவிலான இந்தியத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, இந்த காலகட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான இந்திய தொழிலாளர்களின் இறப்புகள் நேரிட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தும் புள்ளிவிபரங்களை அரசாங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

2020ம் ஆண்டில் சவூதி அரேபியாவில் 3,753 தொழிலாளர்கள் இறந்தனர் என்றும்,  ஒரு வருடம் கழித்து, எண்ணிக்கை 2,328 ஆக குறைந்தது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளும் தொற்று நோய் பரவல் இருந்த காலகட்டம் ஆகும். எனினும், தொற்றுநோயைத் தவிர தொழிலாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நெருக்கடிகளும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்திவிட்ட காரணத்தினால், கடினமான வாழ்க்கைச் சூழல் உருவானது. இருப்பினும், இந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் மோசமான பணிச்சூழலுக்கு ஆளாகியிருக்கலாம் என்பது தெரியவில்லை. 2019 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை 2,353 ஆக இருந்தது.

மேலும் படிக்க | NRI இந்தியாவில் சொத்து வாங்க முடியுமா? இதற்கான விதிகள் என்ன? 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2020 ஆம் ஆண்டில் 2,454 இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2019 இல் 1,751 ஆகவும், 2021 இல் 2,714 ஆகவும் அதிகரித்தது. இதேபோல், வரவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர்பான கட்டுமானப் பணிகள் காரணமாக இந்தியத் தொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ள கத்தாரில், 2021 ஆம் ஆண்டு 420 இந்தியத் தொழிலாளர்களின் இறப்புகளைக் கண்டது. கத்தாரில் 2020 ஆம் ஆண்டு 385 இந்தியத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர், 2019 ஆம் ஆண்டு 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஹ்ரைனில் 2021 ஆம் ஆண்டில் 352 இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் 2020 மற்றும் '19 ஆம் ஆண்டுகளில் 303 மற்றும் 211 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். 2021ல் குவைத்தில் 1,201 இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இதற்கு முன் 2020ல் 1,279 இந்தியர்களும், 2019ல் 707 இந்தியர்களும் இறந்துள்ளனர். 2021ல் ஓமானில் 913 இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர், இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

ஐரோப்பிய நாடுகளில், இத்தாலி மற்றும் ஜெர்மனியில் அதிக எண்ணிக்கையிலான இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர். 2021ஆம் ஆண்டு இத்தாலியில் 304 இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இது 2019-'21ல் அதிகபட்ச எண்ணிக்கையாகும். 2019 முதல் 21, 64, 84 மற்றும் 103 இந்திய தொழிலாளர்கள் ஜெர்மனியில் இறந்துள்ளனர். இதனுடன் ஒப்பிடுகையில், 2021ல் ஆப்கானிஸ்தானில் இரண்டு இந்தியத் தொழிலாளர்கள், 2020ல் எட்டு பேர் மற்றும் 2019ல் ஒருவர் இறந்தனர்.

மேலும் படிக்க | துபாய் லக்கி டிராவில் 1 மில்லியன் டாலர் வென்ற இந்தியர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News