7th Pay Commission: அகவிலைப் படி தொடர்பான அரசின் அட்டகாசமான முடிவு

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களை எதிர்மறையாக பாதித்துள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல,  நாட்டில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன், உலக அளவில் வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளது.  

மத்திய அரசும் தனது வருவாயில் பெரும் இழப்பைச் சந்தித்தால் அரசின் கஜானாவும் திண்டாடுகிறது. இருந்தபோதிலும்,  இந்த சிக்கல்களுக்கு மத்தியில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance (DA) தொடர்பாக அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது என்ன முடிவு என்பதை தெரிந்துக் கொள்ளவும்....

1 /5

முன்னதாக, மார்ச் மாதத்தில் இந்த ஆண்டு dearness allowance (DA)-ஐ 4 சதவீதத்தை 21 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, இது 2020 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். dearness allowance (DA) உயர்வை நிறுத்தி வைப்பதற்கான முடிவை ஏப்ரல் 23 ம் தேதி அரசாங்கம் அறிவித்தது. டி.ஏ.வை உயர்த்துவதற்கான முடிவு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

2 /5

மத்திய அரசு ஒரு வருடத்தில் இரண்டு முறை ஊழியர்களின் டி.ஏ.வை உயர்த்துகிறது-ஒன்று ஜனவரி மற்றும் மற்றொரு ஜூலை. ஆதாரம்: PTI

3 /5

2021 ஜூன் மாதத்திற்குப் பிறகு டி.ஏ.யில் அரசாங்கம் நிவாரணம் வழங்கும் என்று ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, பழைய விகிதத்தில் அகவிலைப் படி கொடுக்கும் முடிவின் நேரடி தாக்கம், 50 லட்சம் அரசு ஊழியர்களையும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களையும் பாதிக்கிறது. ஆதாரம்: PTI

4 /5

புதிய விகிதத்தின்படி அரசு ஊழியர்கள் 21 சதவீதம் டி.ஏ பெறமுடியும். இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக மத்திய கருவூலத்தின் மீதான அழுத்தத்தை சுட்டிக்காட்டி அரசாங்கம் அதற்கு எதிராக முடிவு செய்தது. ஆதாரம்: Pixabay

5 /5

மத்திய அரசு வழங்கிய தகவல்களின்படி, அரசு ஊழியர்களின் Dearness Allowance (DA) உயர்வு குறித்த எந்தவொரு முடிவும் 2021 ஜூன் மாதத்திற்குப் பிறகு எடுக்கப்படும். இதனால் முன்னர் அறிவிக்கப்பட்ட பலன்களை தராது என்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகும். DA hike date மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய டிஏ விகிதத்தை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அரசு ஊழியர்களுக்கு 17 சதவிகிதம் மட்டுமே அகவிலைப் படி  (டிஏ) வழங்கப்படுகிறது. ஆதாரம்: பி.டி.ஐ.