Mindful Exercises For Kids To Increase Focus : குழந்தைகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க, சில பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Mindful Exercises For Kids To Increase Focus : குழந்தைகள் என்பவர்கள், சிறிய உருவத்தில் இருக்கும் மனிதர்கள்தான். இவர்கள் வளர்ந்தால்தான் நல்ல சமூகம் உருவாகும். இவர்கள், ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது கடினமான விஷயமாக இருக்கும். அதற்கு சில பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
ஒரு இடத்தில் அவர்களை நிறுத்தி வைத்து, சுற்றி நிகழும் விஷயங்களை கவனிக்க செய்ய வேண்டும். மேலும், சுற்றி கேட்கும் சத்தத்தையும் கேட்க செய்ய வேண்டும்.
இயற்கையுடன் இணைந்து அவர்களை பணி செய்ய விட வேண்டும். பூக்களை நுகர்தல், மரங்களை கட்டிப்பிடித்தல் உள்ளிட்டவற்றை செய்ய வைக்க வேண்டும்.
பபுள்ஸ் விட வைக்கலாம். இது, அவர்களுடைய படைப்பாற்றலையும் கவனத்தையும் அதிகரிக்க செய்யும்.
குழந்தைகளுக்கு நன்றியுணர்வை அதிகரிக்க செய்ய வேண்டும். இதனால் அவர்கள், தங்களுக்கு கிடைக்கும் விஷயங்களை மதிக்க கற்றுக்கொடுப்பர்.
குழந்தைகளை, அவர்களின் ஐந்து புலன்களையும் உணர செய்ய வேண்டும். அவர்கள் பார்க்கும் 5 விஷயங்களை கூற வைக்க வேண்டும், 4 தொடும் விஷயங்களை தொட செய்ய வேண்டும், 3 கேட்கும் விஷயங்களையும், 2 நுகரும் விஷயங்களையும், 1 சுவைக்கும் விஷயத்தையும் கூறச்செய்ய வேண்டும்.
கலரிங் செய்வதால் அவர்களுக்கு படைப்பாற்றால் அதிகரிப்பதோடு, கவனமும் அதிகரிக்கும்.
மூச்சு பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். இதனால், கவனம் அதிகரிக்கும்.
குழந்தைகளை, அவர்கள் தலை முதல் கால் வரை ஸ்கேன் செய்ய வைக்க வேண்டும். அப்போது. தன் உடலில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு தெரிந்து விடும்.