நடிகர் சிலம்பரசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ்!

நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

 

1 /4

நடிகர்களின் தனித்துவமான நடிப்புத்திறமை, சேவை மனப்பான்மை, மற்றும் இதர திறமைகளை பாராட்டி அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.  அந்த வகையில் தற்போது இளம் நடிகர் சிம்புவிற்கு இன்று(11/01/2022) டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  

2 /4

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் தனது அசாத்திய திறமையால் தற்போது பல ரசிகர்கள் கொண்டாடும் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.  நீண்ட நாட்களாக சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்தவர் 'மாநாடு' படம் மூலம் மாஸாக என்ட்ரி கொடுத்து மீண்டும் புகழை பெற்றுள்ளார்.  

3 /4

இவரின் திறமையை பாராட்டும் வகையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது.  இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்.  மேலும் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் பட்டத்தினை வழங்கினார்.  

4 /4

டாக்டர் பட்டம் பெற்ற உயர்ந்த நடிகர்களின் பட்டியலில் தற்போது சிம்புவும் இணைந்திருப்பது அவர் குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.  டாக்டர்.ஐசரி கே.கணேஷ் சிம்பு நடிக்கும்  'வெந்து தணிந்தது காடு' எனும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.