'காதல் கண் கட்டுதே' - அதுல்யாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை அதுல்யா ரவியின் சமீபத்திய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை அதுல்யா ரவியின் சமீபத்திய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

1 /4

2017ம் ஆண்டு வெளியான 'காதல் கண் கட்டுதே' படத்தின் தமிழ் திரைத்துறைக்குள் கதாநாயகியாக நுழைந்தவர் அதுல்யா ரவி.  தனது ஹோம்லியான லுக்கில் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.  

2 /4

இதற்கு முன்னர் இவர் குறும்படங்களில் நடித்திருக்கிறார்.  இதனையடுத்து இவர் தமிழில் நாகேஷ் திரையரங்கம், ஏமாலி, நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, வட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  

3 /4

சமீபத்தில் சாந்தனுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.  இவரின் எதார்த்தமான நடிப்பு பலரையும் ஈர்த்தது.  

4 /4

இன்ஸ்டாகிராமில் இவர் சமீபத்தில் டீ-ஷர்ட் , ஜீன்ஸ் அணிந்துகொண்டு பதிவிட்ட புகைப்படம் பார்ப்பவர்களை பரவசமடைய செய்துள்ளது.  'உங்கள் கனவுகளை கனவுகளாகவே இருக்கவிடாதீர்கள்' என்ற கேப்ஷனுடன் இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் இதய எமோஜிகளை வாரி வழங்கி வருகின்றனர்.