Body Detox Juices: உடலின் நஞ்சை நீக்கி புத்தணர்வு கொடுக்கும் ஜூஸ்கள்

புதுடெல்லி: உடலில் தேங்கி நிற்கும் நச்சுத்தன்மை பல நோய்களை வரவேற்கிறது. எனவே, ஆரோக்கியமாக இருப்பதற்கான முதல் முயற்சியாக தினசரி இந்த ஜூஸ்களை குடித்து வாருங்கள்.

உடலில் தூய்மையற்ற அல்லது நச்சு பொருட்கள் இருந்தால், அவற்றை தினமும் உடலில் இருந்து வெளியேறிக்கொண்டே இருக்கு உதவும் ஜூஸ்கள் இவை. அவற்றை பருகுவதன் மூலம் உடல் நச்சுத்தன்மை நீங்குகிறது. கல்லீரலும் ஆரோக்கியமாக இருக்கும். 

READ ALSO | மரண மரம்! அருகில் நெருங்கினாலே உயிர்பலி கேட்கும் கொலைகார மரம்

1 /5

இயற்கை ஆண்டிபயாடிக் மஞ்சள் என்பது அனைவருக்கும் தெரிந்தது என்றாலும், மஞ்சள் தூளை பானமாக அருந்தினால் கிடைக்கும் பலன்கள் தெரியாமல் இருக்கலாம். கல்லீரல் நொதிகளை உற்பத்தி செய்து ரத்தத்தை சுத்தப்படுத்த,  சிறிய தேக்கரண்டி மஞ்சளை நீரில்  சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு கலந்து பானமாக பருகவும். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க மிகவும் பயனுள்ள பானம் ஆகும்.

2 /5

பீட்ரூட் சாறு நிறைய இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொண்டது,  கல்லீரலுக்கும் நன்மை பயக்கும்.

3 /5

குடிப்பதற்கு சுவையாக இருக்கும் கரும்பு சாறு,  நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இனிப்புச் சுவை காரணமாக இதனைக் குடிப்பதை மக்கள் தவிர்த்து வந்தாலும், உடலை நச்சு நீக்கி, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இது மிகவும் நல்ல பானம்.  

4 /5

பச்சைக் காய்கறிகளை உண்பது எவ்வளவு பலன் தருகிறதோ, அந்தளவுக்கு அவற்றின் ஜூஸைக் குடிப்பதால் அதிக பலன் கிடைக்கும். இது உடலை நச்சு நீக்கி, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. மேலும், உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குகிறது.

5 /5

க்ரீன் டீ என்பது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் எளிதான மற்றும் பிரபலமான பானமாகும்.ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த க்ரீன் டீயை குடிப்பதால் கொழுப்பை எரிப்பதுடன் கல்லீரலையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.