Cabbage for Weight Loss:எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம்.
குளிர்காலத்தில் எடை அதிகரிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. முட்டைக்கோஸ் உட்கொள்வது இந்த பருவத்தில் எடை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் கார்சினோஜென்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கார்சினோஜென்களைத் தடுக்கும் மற்றும் அகற்றும் கலவைகள் நிறைந்துள்ளன.
முட்டைகோஸை உட்கொள்வதன் மூலம் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம். தாதுக்கள் நிறைந்த இந்த காய் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. இதனை உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
இதில் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது சிறந்த உணவாக அமைகிறது. இதனை உட்கொள்வதால், செரிமானம் சரியாகி, மலம் எளிதாக வெளியேறி, மலச்சிக்கல் சரியாகிறது.
ஆயுர்வேதத்தின் படி, முட்டைக்கோஸ் அதன் உலர்த்தும் தன்மை மற்றும் குளிர்விக்கும் சக்தி காரணமாக வாதத்தை அதிகரிக்கிறது. வாதத்தை குறைக்க, இந்த காயை பொடியாக நறுக்கி, மசாலா மற்றும் எண்ணெய் கொண்டு நன்றாக சமைக்க வேண்டும். இதனை உட்கொள்வதன் மூலம் குடல்புண்ணின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.