சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... தக்காளி சூப் தினமும் குடிங்க

Tomato Soup Benefits: குளிர்காலத்தில் தக்காளி சூப் குடிப்பதே ஒரு அற்புத அனுபவம். வைட்டமின் ஏ, சி, ஈ வைட்டமின்களுடன், குரோமியம், பொட்டாசியம் போன்ற கனிமங்களும், ஆண்டி ஆக்ஸிடண்டுஜ்கள் தக்காளியில் நிறைந்துள்ளன.

உடல் பருமனில் இருந்து, பிபியை கட்டுப்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. தக்காளி சூப் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று விரிவாக பார்ப்போம்.

1 /8

தக்காளி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான காய்கறிகளில் ஒன்று. வைட்டமின் ஏ, சி, ஈ, குரோமியம், பொட்டாசியம், ஆல்பா, பீட்டா, லுடீன் மற்றும் லைகோபீன் கரோட்டினாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்களும், ஆண்டி ஆக்ஸிடண்டுகளும் தக்காளியில் காணப்படுகின்றன.

2 /8

தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை சமைத்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்கின்றனர் வல்லுநர்கள். ஏனெனில், தக்காளியை சமைப்பதால், அதில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்டுகளின் ஆற்றல் அதிகரிக்கின்றன. அந்த வகையில், தக்காளி சூப் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

3 /8

இரத்த ஓட்டம்: தக்காளி சூப்பில் உள்ள செலினியம் இரத்த சோகையைத் தடுப்பதன் மூலம் உடலில் சிறந்த இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. சிறந்த இரத்த ஓட்டத்திற்கு தக்காளி சூப் குடிப்பது சிறந்த என உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

4 /8

உயர் இரத்த அழுத்தம்: தக்காளியில் உள்ள பொட்டாசியம் உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. எனவே, உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தாராளமாக தக்காளி சூப் சாப்பிடுங்கள். இருப்பினும், தக்காளி சூப் தயாரிக்கும் போது, ​​அதில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்கவும்.

5 /8

உடல் எடை இழப்பு: தொடர்ந்து தக்காளி சூப் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். தக்காளி சூப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிறம்பிய உணர்வைத் தரும். இதன் காரணமாக, கூடுதல் கலோரிகளை உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.

6 /8

இரத்த சர்க்கரை அளவு: தக்காளியில் உள்ள குரோமியம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, தக்காளியில் உள்ள நரிங்கின் என்ற ஃபிளாவனாய்டுகள் நீரிழிவு நோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

7 /8

செரிமான ஆரோக்கியம்: குளிர்காலத்தில் செரிமான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அஜீரண் பிரச்சனைகளை தவிர்க்கவும் சிறந்த செரிமான அமைப்பை பராமரிக்கவும் தக்காளி சூப் சாப்பிடலாம்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.