வேகமாக வெயிட்டை குறைக்கணுமா... இந்த 6 பழங்கள் உதவும்... என்னென்ன தெரியுமா?

Weight Loss Tips: உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான வகையில் விரைவான பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால் இந்த 6 பழங்கள் உதவும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Fruits: பழங்கள் கோடை காலத்தில் மட்டுமில்லாமல் அனைத்து காலத்திலும் சாப்பிடலாம். குறிப்பாக, பழங்களை அப்படியே சாப்பிடுவது அதிக பலன்களை கொடுக்கும். ஜூஸாக குடிப்பதை குறைத்துக்கொள்ளலாம்.

1 /7

தர்பூசணி: இதில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ளது. உங்களை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். அதே சமயத்தில் வயிற்றை நிரப்பவும் செய்யும்.   

2 /7

பெரீஸ்: ப்ளூபெரீஸ், ஸ்ட்ராபெரீஸ் மற்றும் ராஸ்பெரீஸ் உள்ளிட்டவை அதிக ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தவை. இவற்றில் ஃபைபர் அதிகம் இருக்கும். இதனால் சாப்பிட்டதும் திருப்தியான உணர்வு கிடைக்கும். எனவே உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.  

3 /7

ஆரஞ்சு: இதில் வைட்டமிண் C மற்றும் ஃபைபர் உள்ளதால் செரிமானத்திற்கும் நல்லது. மேலும், நீண்ட நேரம் வயிறை நிரம்பியிருக்கச் செய்யும்.  

4 /7

ஆப்பிள்: இதிலும் கலோரிகள் குறைவு, ஃபைபர் அதிகம். எனவே, இதை சாப்பிட்டால் வயிறு அடைத்துவிடும், பசியும் திருப்தியடைந்துவிடும். எனவே, இது உடல் எடையை குறைக்க உதவும்.   

5 /7

கிவிப்பழம்: இதில் ஃபைபர் அதிகம் உள்ளது. வைட்டமிணும் உள்ளது. எனவே இதனை ஸ்நாக்ஸாக தாரளமாக உண்ணலாம். உடல் எடை ஏறாது.   

6 /7

பேரிக்காய்: இதிலும் ஃபைபர் அதிகம் உள்ளது. குறைவான Glycemic index இதில் இருக்கிறது. எனவே, இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்.   

7 /7

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை கொண்டு எழுதப்பட்டது. எனவே இதனை கடைபிடிக்கும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.