அக்டோபர் 17 வரை ராகு சனி சேர்க்கை! நிம்மதியாய் இருக்க எளிய பரிகாரங்கள்

Shani - Rahu Nakshatra Gochar 2023: சனியின் நட்சத்திர மாற்றத்தால் உருவான சனி-ராகு சேர்க்கை சிலரது வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுத்தால், பலரது வாழ்வில் சங்கடங்களை ஏற்படுத்துகிறது. ராகு பெயர்ச்சி ஏற்படும் அக்டோபர் மாதம் வரை சில ராசிக்காரர்கள் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் இருக்கும் சனீஸ்வரர் அக்டோபர் 17 வரை அங்கேயே இருக்கப்போகிறார். பாவ கிரகங்களான ராகுவும் சனியும் ஒன்றாக இருப்பதன் தாக்கத்தில் இருந்து விடுபட சில பரிகாரங்கள் உதவும்  

 

 

1 /7

பாவகிரகங்களான சனியும் ராகுவும் ஒன்றாக இருப்பதால் திடீர் ஏற்றத்தையும், எதிர்பாராத சரிவையும் கொடுக்கும். கோச்சாரத்தில், ராகுவை சனி நெருங்கும்போது, சில அபரிமிதமான முன்னேற்றத்தை அளிக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

2 /7

அய்யப்பன் சனியின் அதிபதியாக கருதப்படுகிறார்.சனி தோஷத்தில் இருந்து விடுபட, சனிக்கிழமைகளில் ஐயப்பனை வழிபடலாம்

3 /7

பெருமாளை வழிபட்டால், பெருங்கவலைகளும் தீரும். திருப்பதி சீனிவாசனை சரணடைந்தால் சிக்கல்கள் எல்லாம் மட்டுப்படும்

4 /7

நவகிரகங்களை கட்டுப்படுத்தும் சிவனை சரணடைந்தால் தோஷங்கள் எதுவும் நெருங்காது

5 /7

ராகு கேது இருவரையும் சாந்திப்படுத்த, தேன் அபிஷேகம் சிறந்தது

6 /7

கவுஹாத்தியில் உள்ள நவகிரகங்களுக்கு கோவிலில் வழிபாடு செய்வது சிறப்பு. 1752 ஆம் ஆண்டு அஹோம் மன்னர் ராஜேஸ்வர் சிங்கவால் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் உள் கருவறையில் பல்வேறு வண்ணங்களில் உள்ள சிவனின் 9 லிங்கங்கள் நவகிரகங்களாக வழிபடப்படுகிறது

7 /7

ராகு காலத்தில் துர்க்கைக்கு பூஜை செய்வதும், சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றுவதும் நல்லது