2024 ஆம் ஆண்டின் முதல் ஏகாதசி சபல ஏகாதசி என்பதே இந்த ஆண்டு மங்களகரமானதாக இருக்கும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது. இந்து மதத்தில், சபல ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனவரி 7, 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 12:41 மணிக்கு ஏகாதசி திதி தொடங்கும்
Ekadashi Viratham: சபல ஏகாதசி அன்று காலை 07:15 முதல் இரவு 10:03 வரை பூஜை செய்ய உகந்த நேரம் என்று கூறப்படுகிறது. சர்வார்த்த சித்தி யோகம் உள்ள இந்த நேரத்தில் செய்யும் வழிபாடும், வேலையும் சுப பலன்களைத் தருவதுடன் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்.
ஏகாதசி விரதம் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. அதிலும் மார்கழி மாத ஏகாதசி மிகவும் விசேசமானது. ஏகாதசியன்று விரதம் இருந்து பழங்களை தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டும் இந்த விரதத்தை இருக்கலாம். ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். ஏகாதசி விரதம் ஒன்று இருந்தால், அது ஒரு அஸ்வமேத யாகம் செய்வதற்கு இணையான பலனை தரும் என்பது இந்து மத நம்பிக்கை.
காலையில் எழுந்து குளித்து, விரதம் இருக்க நீங்கள் கடைபிடிக்கும் ஆசாரங்களை செய்யவும். ஏனென்றால், ஒவ்வொருவரும் அவரவர் வழக்கப்படி செய்வது தான் மன திருப்தியைத் தரும். இன்றைய தினத்தில் விஷ்ணு மற்றும் லட்சுமி தாயாரை வணங்குவது தன் பிரதானமானது
அதிலும் ஞாயிற்றுக்கிழமை வரும் ஏகாதசி மேலும் சிறப்பு வாய்ந்தது. இன்று சூரியனை வழிபடுவது விஷ்ணு மற்றும் சூரிய பகவானின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தரும். செம்புப் பாத்திரத்தில் தண்ணீர், பூ, அரிசி, மஞ்சள் ஆகியவற்றை கலந்து சூரிய பகவானுக்கு அர்க்கியம் செய்யுங்கள்.
ஏகாதசி நாளில் ஏழைகளுக்கு ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களை தானமாக வழங்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும்.
பழங்கள் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். ஏகாதசி தினத்தன்று தானியங்களை சாப்பிடுவதில்லை, அதிலுமாக உப்பு சேர்த்துக் கொள்வது விலக்கப்படுகிறது
2024ஆம் ஆண்டு மொத்தம் 25 ஏகாதசி விரதங்கள் கடைபிடிக்கப்படும். இதில் முதல் விரதம் 2024 ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று அனுசரிக்கப்படுகிறது
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை