Weight Loss Tips: உடல் பருமன் அதிகமாக உள்ளதா? தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? இதோ உங்களுக்கான சில வெயிட் லாஸ் டிப்ஸ்.
Weight Loss Tips: இன்றைய பிஸியான வாழ்க்கையில், நம்மால் நம்மை சரியாகக் கவனித்துக் கொள்ள முடிவதில்லை. ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்க்கை முறை, உடல் செயல்பாடுகள் இல்லாத நிலை ஆகியவற்றால் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. தொப்பை கொழுப்பைத் தடுக்கவும், உடல் பருமனைக் கட்டுப்படுத்தவும் வாழ்க்கை முறையில் மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் பருமனுக்கு நிவாரணம் அளிக்கும் சில வழிகளை பற்றி இங்கே காணலாம்.
உடல் எடையை குறைக்க நமது தினசரி வழக்கத்தில் சில முக்கிய விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில வாழ்க்கைமுறை பழக்கங்களை பற்றி இங்கே காணலாம்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க தினசரி உணவுப்பழக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது. டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி: உடல் செயல்பாடு உடல் பருமனை குறைப்பதற்கான முக்கியமான வழியாகும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்ய வேண்டும். இது வேகமாக கலோரிகள் எரிக்கப்படுவதை உறுதி செய்கின்றது.
உறக்கம்: நம் தூக்கத்திற்கும் உடல் எடைக்கும் நேரடி தொடர்பு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டியது மிக அவசியமாகும். சரியான உறக்கம் இல்லாவிட்டால் கொழுப்பு சேரத் தொடங்குகிறது.
தண்ணீர்: தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக்குகிறது. குறிப்பாக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதும் தவிர்க்கப்படும்.
மன அழுத்தம்: மன அழுத்தமும் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. கார்டிசால் ஹார்மோனின் அளவு அதிகரித்தால் உடல் எடையும் அதிகரிக்கும். குறிப்பாக தொப்பை கொழுப்புக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. ஆகையால் தொப்பை கொழுப்பு மற்றும் உடல் பருமனை குறைக்க மன அழுத்தம் இல்லாமல் இருப்பது நல்லது. மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை மேற்கொள்வது நன்மை பயக்கும்.
மூலிகை தேநீர்: பால் கலந்த தேநீருக்கு பதிலாக, இலவங்கப்பட்டை, சீரகம், ஓமம், கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து மூலிகை தேநீர் வகைகளை உட்கொள்ளலாம். இவற்றின் மூலம் கொழுப்பு கரைந்து, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு உடல் எடையும் வேகமாக குறையத் தொடங்குகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.