குரு பெயர்ச்சி 2023, இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், ஜாக்பாட்

Guru Gochar 2023: 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது மிகப் பெரிய பெயர்ச்சி ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி குரு தனது ராசி மாறுகிறார். அதன்படி குரு பெயர்ச்சியாகி மேஷ ராசியில் நுழைவார், இதனால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

குரு பெயர்ச்சி 2023 பலன்: குரு பகவான் சித்திரை மாதம் 9ஆம் தேதி ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் அட்சய திருதியை ஆகும். மேலும் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1 /5

மேஷ ராசி: குரு ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரும். இந்த மக்களின் வாழ்க்கையில் பல இனிமையான மாற்றங்கள் ஏற்படும். தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் இந்தக் காலகட்டத்தில் நிறைவேற்றப்படும். தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.  

2 /5

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு பணப் பலன்கள் கிடைக்கும். உயர் பதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். சமூக செயல்பாடு அதிகரிக்கும். திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

3 /5

கடக ராசி: குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு தூங்கிக் கொண்டு இருந்த அதிர்ஷ்டத்தை எழுப்பும். பதவி - கௌரவம் அதிகரிக்கும். தொழில்-வியாபாரத்திற்கு நல்ல நேரம் அமையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். குரு பகவான் வேலை தொழிலில் எண்ணற்ற மாற்றங்களை தரப்போகிறார். 

4 /5

கன்னி ராசி: வாழ்வில் நேர்மறை அதிகரிக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மதப் பயணம் செல்வது மன நிம்மதியை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.    

5 /5

மீன ராசி: மீன ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழிலுக்கு நல்ல நேரம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.