சிஎஸ்கேவுக்கு விளையாடனும்... ஆசையை சொன்ன ஆர்சிபி வீரர் - தோனி மனசு வைப்பாரா?

Chennai Super Kings: வரும் ஐபிஎல் 2025 சீசனில் (IPL 2025) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய ஆசை இருப்பதாக ஆர்சிபி வீரர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்த ஆர்சிபி வீரர் விக்கெட் கீப்பிங் பேட்டர் என்பதால் இவரும் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு எதிர்காலத்தில் தேவைப்படலாம். எனவே, இவரையும் சிஎஸ்கே மனதில் வைத்துக்கொள்ளும் எனலாம்.

1 /8

ஐபிஎல் 20205 (IPL 2025) சீசனை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதுவும், அதற்கு முன் நடைபெறும் மெகா ஏலத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.   

2 /8

அந்த வகையில், விரைவில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கான (IPL 2025 Mega Auction) விதிகள் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.   

3 /8

இந்த விதிகள் குறித்த விவரங்கள் வெளியாகிவிட்டால் யார் யார் எந்த அணிகளால் தக்கவைக்கப்படுகிறார்கள் என்பது ஏலத்திற்கு முன்னரே தெரியவந்துவிடும். ஏலத்திற்கு யார் வருகிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது.     

4 /8

அப்படியிருக்க, தன்னை ஆர்சிபி அணி (Royal Challengers Bangalore) அடுத்த சீசனுக்கு தக்கவைக்காதபட்சத்தில், தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட ஆசை இருப்பதாக ஆர்சிபி அணியின் இடதுகை அதிரடி பேட்டர் அனுஜ் ராவத் (Anuj Rawat) தெரிவித்துள்ளார். 

5 /8

இதுகுறித்து ஊடகம் ஒன்றில் அவர் பேசுகையில்,"ஆர்சிபியில் விளையாடிவிட்டால் அதைவிட்டு வாழ்நாள் முழுவதும் வெளியே வரவேண்டும் என உங்களுக்கு தோன்றாது. இருப்பினும், அடுத்த சீசனுக்கு ஆர்சிபி என்னை தக்கவைக்கவில்லை எனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு விளையாட வேண்டும் என ஆசை" என அவர் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.   

6 /8

மேலும், அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். "சிஎஸ்கேவில் தோனி (MS Dhoni) இருக்கிறார். அவர் ஒரு வித்தியாசமான ஆளுமை. எல்லோரும் அவரைப் பற்றிதான் பேசுவார்கள். அதனால் சிஎஸ்கேவுக்கு செல்ல விருப்பப்படுகிறேன்" என்றார்.     

7 /8

அனுஜ் ராவத் சமீபத்தில் நடந்த டெல்லி பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணியில் விளையாடினார். இர் தொடரில் 156.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 356 ரன்களை குவித்திருந்தார்.   

8 /8

24 வயதான அனுஜ் ராவத் ஐபிஎல் தொடரில் 21 இன்னிங்ஸ்களில் 318 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். தோனி ஓய்வுக்கு பின் (Replacement For MS Dhoni) இவரின் பேட்டிங் திறன் மட்டுமின்றி  விக்கெட் கீப்பிங் திறனும் சிஎஸ்கேவுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் தேவைப்படலாம்.