Central Government Pensioners Latest News: ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வயது அடிப்படையில் இந்த அதிகரிப்பு இருக்கும்.
Central Government Pensioners Latest News: 80 முதல் 85 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 20% உயர்வு கிடைக்கும். 85 முதல் 90 வயது வரை உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 30% உயர்வு கிடைக்கும். 90 முதல் 95 வயது வரை உள்ள பணியாளர்களுக்கு 40% உயர்வு கிடைக்கும். 95 முதல் 100 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 50% உயர்வு கிடைக்கும். 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 100% உயர்வு வழங்கப்படும்.
நீங்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியரா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி உள்ளது. OPS, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme) கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வயது அடிப்படையில் இந்த அதிகரிப்பு இருக்கும்.
யாருக்கு எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்? 80 முதல் 85 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 20% உயர்வு கிடைக்கும். 85 முதல் 90 வயது வரை உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 30% உயர்வு கிடைக்கும். 90 முதல் 95 வயது வரை உள்ள பணியாளர்களுக்கு 40% உயர்வு கிடைக்கும்.
யாருக்கு எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்? 95 முதல் 100 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 50% உயர்வு கிடைக்கும். 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 100% உயர்வு வழங்கப்படும்.
இந்த ஓய்வூதிய உயர்வு யாருக்கு கிடைக்கும்? பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இந்த உயர்வு வழங்கப்படும். இதற்கு ஊழியர்கள் 20 ஆண்டுகள் வழக்கமான பணியை முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
NPS -இலும் நல்ல செய்தி: தேசிய ஒய்வூதிய அமைப்பு, அதாவது NPS -இல் முதலீடு செய்யும் ஊழியர்களுக்கும் அரசாங்கம் ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. இப்போது இந்த ஊழியர்கள் 20 வருட சேவையை முடித்த பிறகு தேவைப்பட்டால் விருப்ப ஓய்வு (Voluntary Retirement) பெறலாம்.
இந்த விதி எப்போது அமல்படுத்தப்படும்? இந்த விதி அமலுக்கு வரும் தேதியை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் விரைவில் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும். தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை, இது தற்போது ஒரு முன்மொழிவாக மட்டுமே உள்ளது. இந்த உயர்வு கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் கருணைத் தொகையின் (Ex Gratia) வடிவில் இருக்கும். அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அமைப்புகள் / வங்கிகள் இந்த விதியைப் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது. இது குறித்த அரசாங்கத்தின் இறுதி அறிவிப்பு வந்தவுடன் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரித்த ஓய்வூதியம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.