Health Benefits of Broccoli: சிலரால் விரும்பப்படும், அதே நேரத்தில் சிலரால் வெறுக்கப்படும் ப்ரோக்கோலி மிகவும் சுவையான மற்றும் சத்தான காய்கறிகளில் ஒன்றாகும். ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, பல நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
கோடை காலத்தில் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது மிகவும் அவசியம், ஏனெனில் இந்த சீசனில்தான் அதிகமாக நோய்வாய்ப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை சரியான பின்பற்றுவது அவசியம்.
காலிஃப்ளவர், முட்டைகோஸ், குடும்பத்தை சேர்ந்தது ப்ரோக்கோலி. ஒரு கப் ப்ரோக்கோலியில், ஏ, பி 6, பி 2, ஈ வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மெக்னீஷியம், தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
மூளை சுறுசுறுப்பாக இயங்க ப்ரோக்கோலி பெரிதும் உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள ஊட்டச்சத்துக்களும் இயற்கையான உயிர்சக்தி பொருட்களும் மூளை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, நரம்பு திசு செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது. மேலும் நினைவாற்றலை மேம்படுத்தும் திரனும் கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்தி: ப்ரோக்கோலியில் வைட்டமின் சி ஏராளமாக காணப்படுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களில் இருந்து நம் உடலை பாதுகாக்கும்.
உடல் பருமன்: ப்ரோக்கோலி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.
கல்லீரல் ஆரோக்கியம்: ப்ரோக்கோலி கல்லீரலுக்கு ஒரு சஞ்சீவி போன்றது. இதில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஹெபடோப்ரோடெக்டிவ் பன்புகள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கொல்ஸ்ட்ரால்: ப்ரோக்கலியில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
நீரிழிவு: ப்ரோக்கோலியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. எனவே இதை அடிக்கடி உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.