WPL 2024 Prize Amount: மகளிர் பிரிமீயர் லீக் தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கான பரிசுத்தொகை விவரம் குறித்து இங்கு காணலாம்.
சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு மட்டுமின்றி, இரண்டாவது இடம் பிடித்த டெல்லி அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை, ஆரஞ்சு கப், பர்ப்பிள் கப் வென்றவர்களுக்கு எவ்வளவு, தொடர்களில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற விருதுகளை வென்றவர்களுக்கு எவ்வளவு என்பது குறித்தும் இதில் காணலாம்.
தொடர் முழுவதும் அதிக சிக்ஸர்களை அடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஷஃபாலி வர்மாவுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட ஆர்சிபி அணியின் ஜார்ஜியா வார்ஹமுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீராங்கனையாக ஆர்சிபியின் ஸ்ரேயன்கா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
ஃபேன்டஸி கிரிக்கெட்டில் அதிக புள்ளிகளை பெற்ற வீராங்கனையாக (Most Valuable Player) குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் வென்ற ஆர்சிபியின் ஷ்ரேயன்கா பாட்டீல் வென்றார். அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
தொடரில் அதிக ரன்களை அடித்து ஆரஞ்சு கேப் வென்ற ஆர்சிபியின் எல்லிஸ் பெர்ரிக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இரண்டாம் சீசனிலும் இரண்டாம் இடத்தை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
முதல்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ. 6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.