சென்னையில் கனமழை எதிரொளிப்புக் காரணமாக 10 ரயில் சேவைகள் இயங்காது என சென்னை ரயில்வேத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் இதுகுறித்து அறிவோம்.
விடாதுகனமழையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வீட்டில் குவித்து வருகின்றனர்.இந்த நிலையில் 2024 அக்டோபர் 15 அன்று சென்னை ரயில்வேத் துறை வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் ஒன்பது எக்ஸ்பிரஸ் ரயில் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 16 இன்றுக் கூடுதலாக ஒரு ரயில்சேவை இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்த முழு விவரத்தை இங்குப் பார்ப்போம்.
பெங்களூரு- சென்னை சென்ட்ரல் லால்பாஹ் எக்ஸ்பிரஸ் ரயில் கனமழைக் காரணத்தால் இயங்காது என சென்னை ரயில்வே துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- மைசூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இயங்காது என சென்னை ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்காது என சென்னை ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்வே இயங்காது என சென்னை ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மைசூரு-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில், மைசூரு -சென்னை சென்ட்ரல் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்படாது என சென்னை ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் -பெங்களூரு லால்பஹ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் செயல்படாது என ரயில்வே துறை அறிவிக்கப்பட்டுள்ளது.