Actor Santhanam Wife : தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர், சந்தானம். இவருக்கு திருமணமாகி பிள்ளைகளும் உள்ளது. இந்த நிலையில் சந்தானத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Actor Santhanam Wife : கோலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர், சந்தானம். சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தற்போது காமெடி-ஹீரோ நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், இவரது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காமெடி உலகில், கலக்கி வந்தவர் சந்தானம். ஆரம்பத்தில் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் கலைஞராக இருந்தார்.
இவரை மக்கள் பலர் கவனிக்க ஆரம்பித்தது, சச்சின் மற்றும் பொல்லாதவன் படத்தில் இருந்துதான். அதில் அவர் கொடுத்த டைமிங் காமெடி ரசிகர்களை கவர்ந்தது.
சந்தானம் அஜித், விஜய், ரஜினி என பல ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடி நடிகராக நடித்திருக்கிறார். இவரது படங்களுக்கு நல்ல பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது.
சந்தானம், சில ஆண்டுகளுக்கு முன்பு இனி காமெடியனாக நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்தார். அதன் பிறகு தொடர்ந்து காமெடி கதைகளில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சந்தானத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
சந்தானம், பெரிய திரை பிரபலமாக இருந்தாலும் தனது குடும்பத்தினர் குறித்து பெரிதாக எங்குமே பேசியதில்லை.
இந்த நிலையில், அவரது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சந்தானத்தின் மனைவி பெயர், உஷா. இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.