Milk And Diabetes: பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின், லாக்டோசு உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5% என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்களின் நுகர்வு, பல வியாதிகளை நீக்குவதாக நம்பப்படுகிறது. பாலுக்கு இத்தனை சக்தியா? என்றால், இது நோய் தீர்க்கும் அமுதம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க | பளபளக்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கு 5 உணவுகள் செய்யும் மாயம்
பொதுவாக பால் புரதத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது
புரதசத்து நிறைந்த பருப்பு வகைகளை விட பாலில் அதிக புரதசத்து இருக்கிறது.
அசைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி, முட்டை போன்றவற்றிலிருந்து புரதசத்து கிடைத்துவிடும், சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த புரத மையமாக விளங்குவது பால் தான்.
எருமைப்பாலை விட பசும்பாலில் கொழுப்பு குறைவாக உள்ளது