Personality by Zodiac Sign: கிரக தசைகள் மற்றும் ராசிகளின் தசைகளின் படி, ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமையை அறிய முடியும். இவர்களின் தொழில்துறை மற்றும் வர்த்தகத்திலும் இவற்றின் தாக்கம் இருக்கும். இந்த பதிவில், எந்தவித அச்சமும், குழப்பமும் இல்லாமல், உறுதியான மனதுடன் தங்களது பணிகளை செய்யும் 4 ராசிக்காரர்களைப் பற்றி காணலாம். இவர்கள் எப்போதும் தலை நிமிர்ந்து வாழ்பவர்கள். அலுவலகம் மற்றும் வர்த்தகத்தில் எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும், அதை கூலாக கையாளும் திறமை கொண்டவர்கள் இவர்கள். இந்த 4 ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் ஆற்றல் மிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் அச்சமற்றவர்கள். அனைத்து பணிகளையும் முழு மனதுடன் செய்வார்கள். மேஷம் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் கிரகமாகும். செவ்வாய் கிரகம் தைரியம் மற்றும் அச்சமின்மைக்கான காரணியாக கருதப்படுகிறது. மேஷ ராசிக்காரர்கள் அன்பிற்கு அடங்கி வேலை செய்பவர்கள். இவர்களுக்கு சுயமரியாதை மிக முக்கியம் என்பதால், யாருக்கும் அடி பணிய இவர்கள் விரும்புவதில்லை.
இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் உயர் பதவிகள் மட்டுமே கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையையும் முழு நேர்மையுடன் செய்வார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் ஏமாற்றப்படுவதை விரும்ப மாட்டார்கள். மேலும் ஏமாற்றும் நபர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவும் இவர்கள் தவறுவதில்லை.
கும்ப ராசிக்காரர்கள் எதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும் அதை முடித்த பின்னரே அமைதியடைவார்கள். கும்ப ராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருப்பினும், இவர்கள் இயல்பிலேயே பிடிவாதமானவர்கள். அதுமட்டுமின்றி கும்ப ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். இவர்களுக்கு பொதுவாக தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். கும்ப ராசிக்கு சனிபகவான் ஆதரவாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாகவும், சுயமரியாதை உள்ளவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, மகர ராசிக்காரர்களின் எண்ணங்கள் மிகவும் வலுவானவையாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் தாங்களாகவே தீர்வு காண்பதில் இவர்கள் வல்லவர்கள். இந்த ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சுயமரியாதை விஷயத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை. இவர்கள் கடின உழைப்பாளிகள் என்று அறியப்படுகிறார்கள். மகர ராசிக்கும் சனி பகவான் அதிபதியாக கருதப்படுகிறார். இவர் இந்த ராசிக்காரர்களை சுய மரியாதையுடன் வாழ வைக்கிறார். இவர்களுக்கு யாரையும் கும்பிடவோ, தலைவணங்கவோ பிடிப்பதில்லை.