டெல்லி போக்குவரத்து கழகத்தின் (டிடிசி) முதல் மின்சார பஸ்சை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதாவது ஜனவரி 17ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். டிடிசியின் இந்திரபிரஸ்தா டிப்போவில் மதியம் 12 மணிக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கலந்து கொண்டார்.
ஏப்ரல் மாதத்திற்குள், டிடிசியில் மொத்தம் 300 மின்சார பேருந்துகள் இருக்கும். ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த மின்சார பேருந்துகள், டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாட்டைத் தடுக்க புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
டெல்லியில் ஏற்பப்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு பூஜ்ஜிய சதவீத புகையை வெளியிடும் மின்சார பேருந்து முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில ஏசிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜிபிஎஸ் மற்றும் லைவ்-டிராக்கிங் தவிர, வேறு பல வசதிகளையும் கொண்டுள்ளது
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், 300 பேருந்துகளை கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிங்க் பட்டன்களுடன் கூடிய இளஞ்சிவப்பு இருக்கைகள் இருக்கும்