Egypt: 5000 ஆண்டு பழமையான, 22,400 லிட்டர் பீர் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் மேற்கே பாலைவனத்தில் அமைந்துள்ள பழங்கால புதைகுழியான அபிடோஸில் பீர் தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகின் மிக பழமையான பீர் உற்பத்தி தொழிற்சாலை

எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் மேற்கே பாலைவனத்தில் அமைந்துள்ள பழங்கால புதைகுழியான அபிடோஸில் பீர் தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகின் மிக பழமையான பீர் உற்பத்தி தொழிற்சாலை

Also Read | Warning! ஆபாச தகவல்களை Googleஇல் தேடினால் Digital சக்ரவியூகத்தில் சிக்கிவிடலாம்!

(All pics courtesy Egyptian Ministry of Antiquities)

1 /6

இந்த மதுபான தொழிற்சாலையை கண்டுபிடித்த குழுக்களின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் மத்தேயு ஆடம்ஸ் (Dr Matthew Adams), டெய்லி மெயில் பத்திரிகையிடம் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். பண்டைய எகிப்திய மன்னர்களுக்கான அரச புதைகுழி சடங்குகளில் பீர் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

2 /6

பீர் தயாரிக்கும் தொழிற்சாலை 22,400 லிட்டர் உற்பத்தி திறன் கொண்டது.

3 /6

தலா 40 களிமண் பானைகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, களிமண் பானைகள் தானியங்கள் மற்றும் தண்ணீரின் கலவையை சூடேற்ற பயன்படுத்தப்பட்டன.

4 /6

நர்மர் மன்னரின் (King Narmer) ஆட்சிக் காலத்தில் மதுபானம் தொழிற்சாலை செயல்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

5 /6

நர்மர் மன்னர் முதல் வம்சத்தை நிறுவி 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்தார். எகிப்தையும் ஒன்றிணைத்தவர் மன்னர் நர்மர். இது இன்றைய பீர் தொழிற்சாலையின் காட்சி 

6 /6

எகிப்தில் மதுபான தொழிற்சாலை இருந்ததை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் கண்டுபிடித்தனர், ஆனால் அவர்கள் அதன் துல்லியமான இடத்தை தீர்மானிக்கவில்லை.  தற்போது இந்த தொல்லியல் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும்