இந்த உணவு வகைகள் உங்கள் கல்லீரலை அரணாக காக்கும், ஆரோக்கியமாக வைக்கும்


ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான கல்லீரல் முக்கியமானதாகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், நீங்கள் பல வயிற்று பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவது, இரத்தத்தின் அழுக்கை நீக்குவது, நொதிகளை செயல்படுத்துவது என கல்லீரல் பல விதங்களில் செயல்படுகிறது. கல்லீரல் சரியாக வேலை செய்யாததற்கு பல காரணங்கள் உள்ளன. 

வறுத்த பொறித்த உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், அதிகப்படியான புகைபிடித்தல் போன்றவை முக்கிய காரணங்களாகும். கல்லீரல் செயலிழப்பு காரணமாக, உடலில் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

 

1 /5

கிரீன் டீ கல்லீரலுக்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற உதவும். நாள் முழுவதும் 2-3 கப் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.  

2 /5

பீட்ரூட் பீட்ரூட்டை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் செய்ய உதவும்.  

3 /5

கேரட்டில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது நமது உடல் ஆரோக்கியத்தையும் குறிப்பாக கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குளுதாதயோன், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் காணப்படுகின்றன.  

4 /5

வெங்காயம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெங்காயத்தில் கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகள் உள்ளன. அவை உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும்.   

5 /5

எலுமிச்சையின் உதவியுடன் கல்லீரலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்றும். இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி-யும் எலுமிச்சையில் ஏராளமாக காணப்படுகின்றன. இவை உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.