ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா? இந்த முறையை பின்பற்றி பாருங்கள்!

பலரும் 100 சதவீத பேட்டரி சார்ஜ் உடன் வீட்டை விட்டு வெளியேறினாலும் சிறிது நேரத்தில் படிப்படியாக குறைந்து ஆப் ஆகும் நிலைக்கு வந்துவிடும். இதன் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது.

 

1 /5

உங்கள் ஃபோனின் பேட்டரி விரைவாக குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் இதற்கு காரணமாக அமைகின்றன. இதனால் போனின் ஆயுட்காலமும் சீக்கிரம் முடிந்துவிடுகிறது.  

2 /5

ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் போடும் போது பேக் கேஸை கழட்டிவிட்டு சார்ஜ் போடுவது நல்லது. சார்ஜ் செய்யும் போது உங்கள் பேட்டரி வெப்பமடையும். அந்த சமயத்தில் பேக் கேஸ் வெப்பத்தை வெளியேற விடாமல் தடுக்கிறது.  இதனால் பேட்டரி சேதமடைய வாய்ப்புள்ளது.  

3 /5

மேலும், சார்ஜ் போடும் போது பிளக்கை சரியான முறையில் கனெக்ட் செய்ய வேண்டும். இல்லை என்றால் பேட்டரிக்கு பவர் கூடுதலாகவோ அல்லது கம்மியாகவோ வந்தால் பேட்டரி பழுதாக வாய்ப்புள்ளது.  

4 /5

மேலும் இரவு முழுவதும் போனை சார்ஜ் போடும் பழக்கம் வைத்து இருந்தால் அதனை உடனே கைவிடுங்கள். இதன் காரணமாக உங்கள் போன் பேட்டரி விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளது.  

5 /5

முடிந்தவரை பேட்டரி 15-20 சதவிகிதம் இருக்கும் சமயத்தில் சார்ஜ் போடுவது நல்லது. 70-80சதவீதம் இருக்கும் சமயத்தில் சார்ஜ் போடுவது பேட்டரியின் ஆயுட்காலத்தை குறைக்கும்.