Foods To Reduce Bad Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், உடலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்கச் செய்து, LDL அளவை குறைக்க உதவும் இந்த 7 உணவுகளை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.
Low-density lipoprotein cholesterol (LDL) பொதுவாக கெட்ட கொலஸ்ட்ரால் எனவும், High-density lipoprotein cholesterol (HDL) என்பது நல்ல கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு HDL அளவு சீராக இருக்கும் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தானியங்கள்: இதில் வைட்டமிண்கள், கனிமங்கள், ஃபைபர் உள்ளன. எனவே, கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) கட்டுபடுத்தி, இதய நோய் வராமல் காக்கும்.
நட்ஸ்: இதுவும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். உங்கள் ரத்தத்தில் triglycerides என்ற கொழுப்பு அதிகம் இருந்தால் இதய நோய் வரவும், பக்கவாதம் வரவும் வாய்ப்புள்ளது. நட்ஸ் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம்.
மீன்கள்: சால்மன் உள்ளிட்ட ஃபேட்டி மீன்கலை சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும், நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அதிகரிக்கும்.
அவகாடோ: இதில் ஒற்றை நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் ஃபைபர் உள்ளது. இந்த இரண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். நல்ல கொலஸ்ட்ரால் அளவும் சீராக அதிகரிக்கும்.
பூண்டு: இதில் சக்திமிக்க அதிக மருத்துவ மூலக்கூறுகள் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
பருப்புகள்: பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வரும்பட்சத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் நலமாக இருக்கும்.
டார்க் சாக்லேட்: இதில் polyphenols என்ற இரசாயன மூலக்கூறுகள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை.