PM Modi since 2014: பிரதமராக நரேந்திர மோடியின் எட்டாண்டு திட்டங்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 2014 முதல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் எட்டு...

 

1 /8

மோடி அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் "அனைவருக்கும் வீடு" என்ற கருத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. PMAY திட்டம் இந்தியாவில் வீடற்ற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இரண்டு கோடி வீடுகள் கட்டுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2 /8

ஆயுஷ்மான் பாரத் அல்லது "ஆரோக்கியமான இந்தியா" என்பது உலகளாவிய சுகாதார கவரேஜ் (UHC) பார்வையை அடைவதற்காக, தேசிய சுகாதாரக் கொள்கை 2017 இன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தேசிய முயற்சியாகும். ஆயுஷ்மான் பாரத் ஆரம்ப, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நிலைகளில் ஆரோக்கியத்தை முழுமையாகக் கையாள்வதற்கான இலக்குடன் செயல்படுகிறது. 

3 /8

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்பது, சுத்தமான சமையல் எரிபொருளான எல்பிஜியை வழங்குவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக மோடி அரசாங்கத்தின் ஒரு முக்கிய திட்டமாகும். மே 1, 2016 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள பல்லியாவில் PMUY  திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். PMUY இன் கீழ், BPL குடும்பங்களுக்கு குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்யும் வகையில், வீடுகளில் உள்ள பெண்களின் பெயரில் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

4 /8

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) என்ற மக்கள் நலத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014, ஆகஸ்ட் 15ஆம் ஆண்டு அறிவித்தார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர், தீயவற்றில் இருந்து ஏழைகளின் விடுதலையைக் கொண்டாடும் பண்டிகை இந்த திட்டம் என பிரதமர் இந்தத் திட்டத்தை குறிப்பிட்டார். 

5 /8

பிஎம் கிசான் என்பது இந்திய அரசின் 100% நிதியுதவியுடன் கூடிய விவசாயிகளுக்கான திட்டமாகும். 2018, டிசம்பர் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்ட  இத்திட்டத்தின் கீழ்  நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6,000/- வருமான ஆதாரமாக மூன்று சம தவணைகளில் வழங்கப்படும்.

6 /8

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா/பேக்கேஜ் என்பது, கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ. 1.70 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பாகும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதிலும், அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் ஏழைமக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்க, உணவு மற்றும் பணம் கொடுக்கும் இந்தத் திட்டம், மார்ச் 2020 இல் அறிவிக்கப்பட்டது.

7 /8

ஜல் ஜீவன் மிஷன், 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  

8 /8

பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி ஸ்வச் பாரத் மிஷனைத் தொடங்கினார். இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள், கிராம பஞ்சாயத்துகள், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கிராமப்புறங்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான கழிப்பறைகளை கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளுக்குள், இந்தியாவில்  "திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடு" (ODF) என்று அறிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் திட்டம் இது.