EPF Retirement Corpus Calculator: இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் ட்டெபாசிட் செய்கிறது.
EPF Retirement Corpus Calculator: இபிஎஃப் கார்பஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? EPF கார்பஸை 35 ஆண்டுகளுக்கு கணக்கிடுவோம். 25 வயதில் ஒரு ஊழியர் பிஎஃப் கணக்கில் பங்களிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் 60 வயது வரை அதில் பங்களிக்கிறார் என்றும் வைத்துக்கொள்ளலாம். 25 வயதில் ஒருவர் இபிஎஃப் கனக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்க்கத் தொடங்கி, மாதா மாதம் ரூ.4000, ரூ.8,000 அல்லது ரூ.12,000 பங்களிப்பு செய்தால், அவருடைய ஓய்வூதியக் கார்பஸ் எவ்வளவு இருக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் துறை ஊழியர்களுக்காக, ஊழியர் வருங்கால ஓய்வு நிதி திட்டம் (EPF) மற்றும் ஊழியர் ஓய்வூதிய திட்டம் (EPS) ஆகியவற்றை நிர்வகிக்கின்றது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) தாங்கள் பங்களிக்கும் மாதாந்திர பங்களிப்புகளின் மூலம் ஓய்வூதிய கார்பஸை உருவாக்குகிறார்கள்.
இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் ட்டெபாசிட் செய்கிறது. தற்போது இபிஎஃப் தொகைக்கு (EPF Amount) 8.25 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படுகின்றது.
ஒரு ஊழியர் சில தசாப்தங்களுக்கு தொடர்ந்து பங்களிப்பை அளித்தால், அவரது சிறிய மாதாந்திர பங்களிப்பு ஒரு பெரிய கார்பசாக உருவாகும். இத்திட்டத்திந் கீழ், குறைந்தபட்சம் ரூ. 15,000 மாத அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்கள் EPF கணக்கைத் தொடங்கலாம். இதில் அவர்கள், குறைந்தபட்ச பங்காக ரூ.1,800 செலுத்த வேண்டும்.
நிறுவனம் எவ்வளவு பங்களிக்கிறது? பணியாளர்கள் பங்களிக்கும் அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. எனினும், நிறுவனத்தின் முழு பங்களிப்பும் EPF க்கு செல்லாது. நிறுவனத்தின் மொத்த பங்களிப்பான 12 சதவீதத்தில், 3.67 சதவீதம் ஊழியரின் EPF கணக்கிற்குச் செல்கிறது, மீதமுள்ள, 8.33 சதவீதம் ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு (EPS) செல்கிறது.
ஒரு ஊழியர் ஓய்வு பெற்றாலோ (அல்லது 58 வயதிற்குள்), 10 வருட சேவையை முடித்த பிறகு, 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட ஓய்வூதிய வயதிற்கு முன் இறந்தாலோ, பிஎஃப் உறுப்பினர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் / நாமினி ஆகியோருக்கு EPF தொகை அளிக்கப்படும்.
ரூ. 4,000 மாதாந்திர EPF பங்களிப்புக்கான மொத்த முதலீடு எவ்வளவு இருக்கும்? மாதா மாதம் ரூ.4,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.16,80,000 ஆக இருக்கும். ரூ.4,000 மாதாந்திர பங்களிப்பில் மதிப்பிடப்பட்ட கார்பஸ் எவ்வளவு இருக்கும்? 4,000 ரூபாய் மாதாந்திர பங்களிப்பில், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ 94,67,170.51 ஆக இருக்கும்.
ரூ. 4,000 மாதாந்திர EPF பங்களிப்புக்கான மொத்த முதலீடு எவ்வளவு இருக்கும்? மாதா மாதம் ரூ.4,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.16,80,000 ஆக இருக்கும். ரூ.4,000 மாதாந்திர பங்களிப்பில் மதிப்பிடப்பட்ட கார்பஸ் எவ்வளவு இருக்கும்? 4,000 ரூபாய் மாதாந்திர பங்களிப்பில், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ 94,67,170.51 ஆக இருக்கும்.
ரூ. 8,000 மாதாந்திர EPF பங்களிப்புக்கான மொத்த முதலீடு எவ்வளவாக இருக்கும்? மாதா மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.33,60,000 ஆக இருக்கும். ரூ.8,000 மாதாந்திர பங்களிப்பில் மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,89,34,341.01 ஆக இருக்கும்.
ரூ. 12,000 மாதாந்திர EPF பங்களிப்புக்கான மொத்த முதலீடு எவ்வளவு ? மாதா மாதம் ரூ.12,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.50,40,000. ஆக இருக்கும். 12,000 ரூபாய் மாதாந்திர பங்களிப்பில், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.2,84,01,511.52 ஆக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீடுகள் முதலீட்டு ஆலோசனை அல்ல. இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. EPF குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.