Thick hair After The Age Of 50 : 50 வயதை கடந்த பிறகும் கூந்தலை அடர்த்தியாகவும் அழகாகவும் வைத்திருக்க விரும்பினால், இதற்கு சில எளிய குறிப்புகளைப் பின்பற்றினால் போதும். அவை என்னவென்று இந்த பதிவில் காண்போம்.
வயது ஏற ஏற கூந்தல் வறண்டு போய் கொண்டே இருக்கிறதா? மேலும் கூந்தலின் அடர்த்தியும் இழக்கிறீர்களா? அப்படியானால் இனி கவலைப்பட தேவையில்லை. இதற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். இந்த டிப்ஸ் 50 வயதுக்கு கடந்த பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அடர்த்தியான, மென்மையான கூந்தல் வேண்டுமானால், வாரம் இருமுறை எண்ணெய் மசாஜ் செய்யவும். ஹேர் மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்க, வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக அவகேடோ ஹேர் மாஸ்க் முடியின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.
முடி வளர்ச்சிக்கு உணவு முறை சரியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவை சாப்பிட முயற்சியுங்கள். நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும்.
முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம். எனவே, முடிந்த வரை மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சியுங்கள். மன அழுத்தத்திருந்து விடுப்பட யோகா, தியானம் போன்றவற்றை செய்யவும்.
50 வயதை கடந்த பிறகு முடி பராமரிப்பு மிகவும் அவசியம். இதற்கு சரியான கெமிக்கல் இல்லாத ஷாம்பு, எண்ணெய், சீப்பு போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.