G 20 India: இந்தியா தலைமையேற்று நடத்திவரும் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகளின் முக்கியத் தருணங்கள்....
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கி,18-வது உச்சி மாநாட்டை தலைநகரில் நடத்திக் கொண்டிருக்கிறது.
டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் நிகழ்ச்சிகள் உலக அளவில் கவனிக்கப்படுகிறது
இன்று (2023 செப்டம்பர் 9, சனிக்கிழமை) நடந்த முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றினார்.
பிரதமர் அமர்ந்துள்ள மேசை மீது இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
’இந்தியா’ என்ற நமது நாட்டின் பெயருக்கு பதிலாக, இந்திய அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பாரத் என்ற பெயரை ஜி 20 மாநாட்டின் பல்வேறு அதிகாரபூர்வ ஆவணங்களில் அரசு பயன்படுத்தியுள்ளது
பிரதமர் மோடி, “பாரத் வெர்சஸ் இந்தியா” சர்ச்சை குறித்து கருத்து கூறுவதை தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
ரஷ்யா மற்றும் சீனாவைத் தவிர, உலகின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஜி20 மாநாட்டிற்காக இந்தியாவில் கூடியிருக்கின்றனர்
இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாட்டிற்கு வந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார்
ஜி20 மாநாட்டுக்கு வந்த தலைவர்களில் பலரும் புகழ்பெற்ற காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சுற்றுலா சென்றனர். இது இந்தோனேசிய அதிபரும் அவர் மனைவியும்....