Largest Ashtadhatu Nataraja At G20: ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டப கூடத்தின் முன்பு, தமிழர்களின் கலைப் பெருமையை பறைசாற்றி நிற்கும் நடராஜர் சிலை
பாரத மண்டபத்தில் உள்ள அற்புதமான நடராஜர் சிலை நமது வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை உயிர்ப்பிக்கிறது.
டெல்லியில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டு மண்டபத்தின் முன்பு தமிழர்களின் பெருமையை பறைசாற்றி நிற்கிறது பிரம்மாண்டமான நடராஜர் சிலை.
பாரத மண்டபத்தில் உள்ள அற்புதமான நடராஜர் சிலை நமது வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை உயிர்ப்பிக்கிறது. ஜி 20 உச்சிமாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழமையான கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக நிற்கும்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த தேவ சேனாதிபதி சிற்ப கலைக்கூடத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீகண்டன் சகோதரர்கள் இந்த பிரம்மாண்ட சிலையை உருவாக்கிய கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஷ்டதாது அதாவது தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் என வெவ்வேறு 8 உலோகங்களின் கலவையிலிருந்து செய்யப்பட்ட நடராஜர் சிலை இது.
சிலைகள், விக்ரகங்கள் மற்றும் கோவில் மணிகள் போன்ற புனித மற்றும் ஆன்மீக பொருட்களை உருவாக்க அஷ்டதாது பயன்படுத்தப்படுத்துவது வழக்கம்
ஜி 20 உச்சிமாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழமையான கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக நிற்கிறார் வானளாவிய நடராஜர்
27 அடி உயரமும், 18 டன் எடையும் கொண்ட இந்த சிலை, அஷ்டதத்துகளால் ஆன மிக உயரமான நடராஜர் சிலை இது
ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரால் 7 மாதங்களில் செதுக்கப்பட்டுள்ளது
பிரபஞ்ச ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் சக்தி ஆகியவற்றின் முக்கிய அடையாளமான நடராஜரின் இந்த சிலை G20 உச்சிமாநாட்டில் அனைவரையும் கவரும் ஒரு அம்சமாக இருக்கும்
கலாச்சார அமைச்சகத்தின் குழுவான IGNCAவின் திட்டத்தின் வெளிப்பாடாக புதுடெல்லியில் நடராஜர் உயர்ந்து நிற்கிறார்