இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். பல சுற்றுலாத் தலங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால், நமது பரந்த அழகான நாட்டில், பேய் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற சில மர்மமான சுற்றுலா தலங்கள் உள்ளன, மக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பார்க்கவும் உணரவும் இங்கு வருகிறார்கள். அறிவியலால் கூட இன்று வரை இதற்கான விடை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்தகைய சில மர்மமான இடங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்
டெல்லி கண்டேன்மெண்ட் பகுதி இயற்கை அழகும் பாதுகாப்பும் நிறைந்த பகுதி தான். ஆனால், இங்கு செல்லும் மக்கள் விசித்திரமான விஷயங்களை பார்ப்பதாக கூறுகின்றனர் வெள்ளைப் புடவை அணிந்த ஒரு பெண் தோன்றி மக்களிடம் லிப்ட் கேட்பதாக அவர்கள் கூறுகின்றனர். லிப்ட் கொடுக்காத நபர்கள், பின்னால் அவள் ஓடி வருவதாகவும் கூறுகின்றனர்.
மீரட்டின் ஜிபி பிளாக் பகுதியும் மர்மங்கள் நிறைந்தது. சில சமயங்களில் சிவப்பு நிற புடவை அணிந்து, ஒரு பெண் கட்டிடத்திலிருந்து வெளியே வருவதையும், சில சமயங்களில் கட்டிடத்தின் மேல் ஏறி வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கு நான்கு சிறுவர்கள் வீட்டில் உள்ள மேஜையில் பீர் அருந்துவதையும் சிலர் பார்த்ததாக கூறுகின்றனர். இந்த விசித்திரமான சம்பவங்களால், மக்கள் அதற்குள் செல்லவே அஞ்சுகின்றனர்.
மும்பை மாஹிமில் D’Souza Chawl அமைந்துள்ளது. இதனை சுற்றி ஒரு பேய் ஆவி சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கும் வசித்து வந்த பெண், ஒரு நாள் இரவு கிணற்றில் தண்ணீர் நிரப்பச் சென்றவள் எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்து இறந்தாள். தற்போது இந்த கிணறு மூடப்பட்டுள்ளது. அப்போதிருந்து அவரது ஆன்மா இங்கு அலைந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
குஜராத் கடற்கரையில் அமைந்துள்ள டுமாஸ் கடற்கரையும் மர்மம் நிறைந்தது. மிக அழகான கடற்கரையான இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் உள்ளூர் மக்களின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மனம் நடுங்குகின்றனர். இந்த கடற்கரையில் கண்ணுக்கு தெரியாத சக்திகள் வாழ்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சூரியன் மறைந்த பிறகு, இந்த கடற்கரையில் அலறல் மற்றும் கூச்சல் சத்தம் கேட்கிறது. ஒரு காலத்தில் இங்கு கல்லறைகள் இருந்தன.
ராஜஸ்தானின் குல்தாரா கிராமத்தின் மக்கள் தொகை ஒரு காலத்தில் 1500 ஆக இருந்தது, ஆனால் ஒரு நாள் மக்கள் அனைவரும் ஒரே இரவில் காணாமல் போனார்கள். அப்போதிருந்து மக்கள் இந்த கிராமத்தை பேய் என்று அழைக்கிறார்கள். அந்த மக்கள் எங்கு சென்றார்கள் என தெரியாமல், இந்த மர்மம் இன்றுவரை நீடிக்கிறது. அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தில் யாரும் குடியேறவில்லை. இந்த கிராமம் சுமார் 200 ஆண்டுகளாக பாழடைந்து கிடப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்த கிராமம் ஜெய்சல்மரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த கிராமம் 1291 இல் பாலிவால் பண்டிட்கள் இங்கு குடியேறினர்.