Sani Peyarchi 2023: வேத ஜோதிடத்தில், சனி நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். சனி பகவான் அள்ளியும் கொடுப்பார், கிள்ளியும் கொடுப்பார்.
சனி தற்போது கும்ப ராசியில் இருக்கிறார் அடுத்த 25 மாதங்கள் அவர் கும்ப ராசியில் இருப்பார். சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை ராசி மாறுகிறார். சனி ராசி மாறும்போது சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி மற்றும் சனி தசையின் தாக்கமும் ஏற்படுகின்றது.
தற்போது 5 ராசிகள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளனர். சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், 5 ராசிக்காரர்கள் அடுத்த 25 மாதங்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அடைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு அடுத்த 25 மாதங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் வளரும். லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
மிதுன ராசியில் இருந்து சனியின் தாக்கம் நீங்கிவிட்டது. இது இந்த ராசிக்காரர்களின் தொழிலுக்கு ஏற்றது. இவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் பல சாதனைகளை செய்யலாம். பழைய கடனை அடைப்பதில் வெற்றி உண்டாகும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு மார்ச் 2025 வரை சனி பகவான் பல நன்மைகளைத் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வருமானம் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து பணம் வரும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தருவார் சனி. நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் கிடைக்கும். அந்தஸ்து உயரும், அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் நன்றாக நடக்கும். புதிய சொத்து வாங்கலாம்.
சனி கும்பத்தில்தான் இருக்கிறார் என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருவார். கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற வாய்ப்புகள் அமையும். வேலை மாற்றம் ஏற்படலாம். சம்பள உயர்வு இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை