RapidX நாளை முதல் தொடங்கும்! டெல்லி-மீரட் வழித்தடத்தில் இயங்கும் அதிவிரைவு ரயில்

RapidX Inauguration: டெல்லி தேசிய தலைநகர் பகுதியை (NCR) மீரட் நகருடன் இணைக்கும் ரேபிட் எக்ஸ் ரயிலை நாளை (அக்டோபர் 20, வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். RapidX அமைப்பு ஒரு அரை-அதிவேக நகர்ப்புற ரயில் அமைப்பாகும், இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். 

டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பின் (Delhi–Meerut Regional Rapid Transit System, RRTS) முதல் பகுதி திறக்க தயாராக உள்ளது. இந்த 17 கிலோமீட்டர் பகுதி சாஹிபாபாத்திலிருந்து துஹாய் வரை செல்கிறது. இந்தியாவின் முதல் அரை-அதிவேக நகர்ப்புற ரயில் அமைப்பான RapidX, காஜியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் மற்றும் துஹாய் இடையே பயணிக்கும்.

டெல்லி முதல் மீரட் வரையிலான 82.1 கிலோமீட்டர் நடைபாதையின் முதல் பகுதியாக, 17-கிலோமீட்டர் பிரிவு நாளை தொடங்கவிருக்கும் இந்த ரயில் கேரிடர், 2025 இல் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 /8

RAPIDX ரயில்கள் பிரதமர் மோடியின் “மேக் இன் இந்தியா” மற்றும் “ஆத்ம நிர்பார் பாரத்” முயற்சிகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். இந்த தடத்தில் நாளை முதல் ரயில் இயங்கத் தொடங்கும்.

2 /8

டெல்லி-காசியாபாத்-மீரட் RRTS நடைபாதையானது ஆண்டுக்கு 2,50,000 டன்களுக்கு மேல் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதனால் மிகவும் ஆற்றல் திறன் கொண்ட போக்குவரத்து அமைப்பாக இது இருக்கும். 

3 /8

இந்தியாவில் கவச் தொழில்நுட்பம் மற்றும் புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ரேபிட் எக்ஸ் ரயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

4 /8

ஐந்து நிலையங்களில் சேவையை தொடங்கும் ரேபிட் எக்ஸ் ரயில், சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய்-டிப்போ ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கும்.   

5 /8

ரயில் சேவைகள் 15 நிமிட இடைவெளியில் கிடைக்கும் மற்றும் இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும்.

6 /8

இருபுறமும் முதல் ரயில் காலை 6 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11 மணிக்கும் இயக்கப்படும்

7 /8

ஒவ்வொரு RapidX ரயிலிலும் 6 பெட்டிகள் உள்ளன, அதில் சுமார் 1700 பயணிகள் ஒன்றாகப் பயணிக்க முடியும். ஒவ்வொரு ஸ்டாண்டர்ட் கோச்சிலும் 72 இருக்கைகளும், பிரீமியம் கோச்சில் 62 இருக்கைகளும் உள்ளன.  

8 /8

ரயிலில் ஒரு பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்படும். ரயிலின் மற்ற பெட்டிகளிலும் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஒவ்வொரு பெட்டியிலும் மாற்றுத்திறனாளிப் பயணிகள்/மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.