Breakfast Or Bedtime Best Dry Fruits Combo: பஞ்சாமிர்தம் என்பது நமது தமிழ்நாட்டின் சிறப்புமிக்க பிரசாதம். முருகனுக்கு பஞ்சாமிர்தம் என்பது மிகவும் பக்திசிரத்தையுடன் படைக்கப்படும் பிரசாதம் ஆகும். தேன், வாழைப் பழம், நாட்டு சக்கரை, கற்கண்டு, பேரிச்சம்பழம், என அமிர்தத்தை ஒத்த 5 பொருட்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் பிரசாதம் என்றாலும் அது மிகவும் சத்தானது.
தமிழகத்தில் முருகனுக்கு பஞ்சாமிர்தம் என்றால், ஐந்து பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படும் பஞ்சமேவா என்பது ஐந்து சுவையான மற்றும் சத்தான உலர் பழங்களின் கலவையாகும்.
கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள உலர்பழங்களின் கலவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
பாதாம் பருப்பை வாதுமை எனவும், வலாங்கொட்டை எனவும் அழைப்பார்கள். மிகவும் சத்தான கொட்டையான பாதாம் சாப்பிடுவது மூளையை கூர்மையாக்குகிறது. திசுக்களை வலுவாக வைத்திருக்கும், சருமத்தை இளமையாக பராமரிக்கும் என்பதால் பாதாம் உடல் ஆரோக்கியத்திற்கும், தோற்றப்பொலிவுக்கும் உகந்தது
கொடிமுந்திரி என்று அழைக்கப்படும் திராட்சைப் பழத்தை, அப்படியே பழமாக சாப்பிடலாம், பழரசமாக பருகலாம், அதோடு உலர வைத்து உலர்பழமாக உண்டாலும் அதன் ஆரோக்கிய பண்பு குறைவதில்லை
முந்திரி என்பது பழமாக காய்த்தாலும், அதை யாரும் பழமாக உண்பதை விட, உலர் பழமாகவே பயன்படுத்துகின்றனர். முந்திரியில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுவதால் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. முந்திரியில் நல்ல புரதம் உள்ளது
பேரிச்சம்ப்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்
குடல் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்ட உலர் திராட்சை, களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். பசியின்மை, வயிறு உப்புசம், செரிமானக் கோளாறுகள் போன்றவற்றுக்கு திராட்சை சிறந்த மருந்து ஆகும்
பாதாம், முந்திரி, கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பேரிச்சை என ஐந்து அற்புதமான பழங்களின் கலவை உடலாரோக்கியத்தை மேம்படுத்துகிறது
தனித்தனியாக உண்டாலும் சரி, ஒன்றாக சாப்பிட்டாலும் சரி, காலை மாலை இரவு என எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மை தரும் பாதாம் முந்திரி பேரிச்சை மற்றும் திராட்சையின் கலவை உடலுக்கு தேவயான எல்லாச் சத்துக்களையும் கொடுக்கிறது. இதை தினசரி ஒருவேளையாவது உண்டு வந்தால், அழகும் ஆரோக்கியமும் எப்போதும் சிறக்கும்.