Cash Deposit and Withdrawal Limit in Savings Account: சேமிப்புக் கணக்கில் (Savings Account) பணத்தை வைப்பது, சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு நல்ல வழியாகும். வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்வது தவிர, பணமாக வங்கியில் போடுவதும் உங்கள் வங்கி இருப்பை அதிகரிக்க மற்றொரு வழியாக உள்ளது.
How much Cash can you keep in your Savings Account: பணத்தை வீட்டில் சேமித்து வைப்பதற்குப் பதிலாக, உங்கள் சேமிப்புக் கணக்கில் வைப்பது விவேகமானது. ஒவ்வொருவரும் தங்கள் வங்கிக்கணக்கை சிறந்த வழியில் நிர்வகிக்க பல்வேறு விதிகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு நிதி என்ன என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். சேமிப்புக் கணக்கில் ரொக்க வைப்பு வரம்பை அறிவது மற்றொரு முக்கியமான விஷயமாகும். ரொக்க வைப்பு வரம்பு (Cash Deposit Limit) என்பது ஒரு நாளில் உங்கள் கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகையை குறிக்கிறது.
உங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய முடியும்? இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வழிகாட்டுதல்களின்படி, உங்கள் பான் கார்டு விவரங்களை வழங்காமல் உங்கள் சேமிப்புக் கணக்கில் 50,000 வரை டெபாசிட் செய்யலாம். இருப்பினும், நீங்கள் அதிக தொகையை டெபாசிட் செய்ய விரும்பினால், உங்கள் பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டும்.
ஒரு நாளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு மற்றும் ஒருவரிடமிருந்து 2 லட்சம் வரை பண வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் ரொக்க வைப்பு வரம்பு 10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பரிவர்த்தனை வரம்பு இதை மீறினால், அது வருமான வரி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்.
ரிசர்வ் வங்கி (RBI) சேமிப்புக் கணக்கு வைப்பு வரம்பை ஒரு நிதியாண்டில் 10 லட்சமாக நிர்ணயித்துள்ளது. உங்கள் ரொக்க டெபாசிட் இந்த தொகையை விட அதிகமாக இருந்தால், உங்கள் பரிவர்த்தனைகளை சுட்டிக்காட்டும் வகையில் வருமான வரித்துறையின் அறிவிப்பு வரலாம். இருப்பினும், தொகைக்கு நேரடியாக வரி விதிக்கப்படுவதில்லை.
நீங்கள் உங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும்போது, உங்கள் வருமான ஆதாரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் தொடர்புடைய வருமான வரம்புக்கு ஏற்ப வரிகளை செலுத்த வேண்டும். நிதி ஆதாரத்தை உங்களால் சரிபார்க்க முடியாவிட்டால், வருமான வரிச் சட்டத்தின் 68வது பிரிவின் கீழ், வருமான வரித் துறை (Income Tax Department), டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 60% வரியையும், 25% கூடுதல் கட்டணத்தையும், 4% செஸையும் விதிக்கலாம்.
50,000 ரூபாய் வரையிலான ரொக்க வைப்புத்தொகைக்கு நீங்கள் பான் கார்டு விவரங்களை உங்கள் வங்கியில் வழங்கத் தேவையில்லை. 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய, நீங்கள் பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டும்.
நீங்கள் சேமிப்புக் கணக்கில் ஒரு பரிவர்த்தனையில், ஒரு நபரிடமிருந்து அல்லது ஒரு நாளில் அதிகபட்சமாக 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு பிரிவு 269ST இன் கீழ், 100% அபராதம் விதிக்கப்படும். உங்கள் சேமிப்புக் கணக்கில் நீங்கள் வருடத்திற்கு ரொக்கமாக டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை 10 லட்சம்.
நிதியாண்டில் நீங்கள் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், உங்கள் வங்கி வருமான வரி அதிகாரிகளுக்கு இதைப் பற்றி தெரிவிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வருமான ஆதாரத்தை அறிய வருமான வரித்துறை உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் (Income Tax Notice) அனுப்பலாம். உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது நீங்கள் நிதி ஆதாரத்தை அறிவிக்க வேண்டும், மேலும் உங்கள் வருமான வரம்புக்கு ஏற்ப உங்களுக்கு வரி விதிக்கப்படும்.
ஒரு சேமிப்புக் கணக்கிலிருந்து ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு (Withdrawal Limit) வங்கிக்கு வங்கி மாறுபடும். பொதுவாக, அதிக பிரீமியம் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக தொகையை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். உங்கள் வங்கியில் மாதாந்திர பணம் எடுக்கும் வரம்பும் இருக்கலாம். உங்களுக்கான சரியான சேமிப்புக் கணக்கைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த விதிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.