How To Heal Cracked Heels : நம்மில் பலர், பாதவெடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருவோம். அதை சரிசெய்ய நாம் சில வீட்டுக்குறிப்புகளை பின்பற்றலாம். அவை என்னென்ன தெரியுமா?
How To Heal Cracked Heels : மனிதனுக்கு அவனிடம் இருக்கும் உடல் பாகங்கள் அனைத்துமே முக்கியமானதாகும். அதிலும், நமது ஒட்டுமொத்த உடலின் எடையையும் தாங்கும் பாதம் மிக முக்கியமானது. ஆனால், நாம் இதை சரியாக பராமரிப்பதே இல்லை. இதனால் பாத வெடிப்பு, தோல் உரிதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதை சரிசெய்ய, சில வீட்டு டிப்ஸ் இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
கால்களில் இருக்கும் சருமத்தை பாதுகாக்க, சில Foot Mask-கள் விற்கப்படுகின்றன. இவற்றை பாதத்தில் அணியலாம்.
நமது கண்களுக்கும், பாதத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், பாதத்தை பராமரிக்கும் போது, கண்களை பராமரிப்பதும் முக்கியமாகும்.
வெந்நீரில், சோப் கலந்து உங்கள் கால்களை 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். பின்பு, ஒரு பிரஷ் வைத்து கால்களை சுத்தம் செய்ய வேண்டும். இதனால், கிருமிகள் உங்கள் சருமத்தை தாக்காமல் தடுக்கலாம்.
தயிர், தேன், வாழைப்பழம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து பேஸ்ட்டாகத் தயாரிக்கவும். பிறகு அந்தப் பேஸ்டை பாதங்களில் அப்ளை செய்யவும். இது பாதங்களில் ஏற்பட்ட வறண்ட நிலையைச் சரி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.
உடல் வெப்பமடையாமல் மிதமான குளிர்ச்சியுடன் வைத்திருந்தால் பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க உதவும் என்று கூறப்படுகிறது.
நாம் தினமும் குளித்தப்பின் மற்றும் கழிவறைக்கு சென்று விட்டு வரும் போது, தவறாமல் பாதத்தை நன்றாகக் கழுவ வேண்டும்
உங்கள் கால்களுக்கு ஏற்ற, தகுந்த செருப்பை அணிவது மிகவும் அவசியம் ஆகும். இதனால் பாதங்களில் வலி ஏற்படுவதையும் தடுக்கலாம்.
தேங்காய் எண்ணெய்யை சிறிதளவு சூடுப்படுத்தி, சிறிய காட்டன் துண்டால் பாதம் முழுவதும் சுற்றி தடவவும். இதனால் பாத சருமத்தில் இருக்கும் வறண்ட தோல் சரியாகலாம்.