மாதம் 500 ரூபாய் முதலீடு செய்து கோடீஸ்வரராகலாம்! எப்படி? மாதாந்திர SIP திட்டம் இருக்கே?

Save In SIP :  பணம் சம்பாதிப்பதை விட அதை எப்படி செலவு செய்வது, எங்கு எவ்வாறு முதலீடு செய்வது என்பதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது. புத்திசாலித்தனமாக பணத்தை சேமித்தால், அது எளிதில் பன்மடங்காகப் பெருகும்.  

பன்மடங்கு வருமானத்தை கொடுக்கும் பல முதலீட்டு திட்டங்களில் ஒன்றுதான் பரஸ்பர நிதியம் என்னும் SIP முதலீடு. மாதம் 1000 ரூபாய் சேமித்தால் கூட, அது கோடி ரூபாயாக மாறும்...

1 /8

சேமிப்பு என்றால், வீடு நிலம், வங்கி, தங்கம் என இருந்த நிலை தற்போதும் அருமையான முதலீட்டு வாய்ப்புகள் தான். ஆனால், சிறு தொகையை அவ்வப்போது முதலீடு செய்ய ஏற்றது எது?

2 /8

ரிஸ்க் எடுத்து, மியூச்சுவல் ஃபண்டு எனப்படும் பரஸ்பர நிதியங்களில் பணத்தைப் போட்டு, ஒன்றை நூறாக்கும் போக்கு இன்று லேட்டஸ்டாக டிரெண்டிங்கில் இருக்கிறது  

3 /8

சேமிப்பதற்கு பெரிய அளவு சம்பாத்தியம் இல்லை என்றாலும், மிகக் குறைந்த தொகையை சேமித்து பலனடையலாம். மாதந்தோறும் ஐநூறு ஆயிரம் ரூபாய் சேமிப்பு என்பதில் தொடங்கலாம்

4 /8

பரஸ்பர நிதியங்களில் 20% வரை வருமானம் கிடைக்கின்றன. முதலீடுகள் தொடர்பான ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?  

5 /8

முதலீடுகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும் நிறுவனங்கள், குறைந்த வருமானம் உள்ளவர்கள் குக்றைந்தபட்சம் 500 அல்லது 1000 ரூபாயுடன் சேமிக்கத் தொடங்கலாம் என்று அறிவுறுத்துகின்றன

6 /8

நீண்ட கால முதலீடுகள், ஒருவர் சம்பாதிக்கத் தொடங்கும்போதில் இருந்து செய்தால், அது அவரது ஓய்வுக்காலத்திற்கு பலனளிக்கும்

7 /8

மாதம் 500 ரூபாய் என்ற விகிதத்தில் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால், கோடிக்கணக்கில் பணம் திரும்பக் கிடைக்கும். 30 வருடங்களுக்கு, மாதம் ₹500 முதலீடு செய்தால், 20% வருமானம் என்ற அடிப்படையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ₹1 கோடியே 16 லட்சம் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும்

8 /8

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது