சன்னி லியோனுக்கும் மகளிர் உதவித் தொகை...? வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1000 - பகீர் பின்னணி

1000 Rupees For Womens: சத்தீஸ்கரில் மாநில அரசு சார்பில் பெண்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் 1000 ரூபாய் திட்டத்தில், சன்னி லியோன் பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலும் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Chhattisgarh: சத்தீஸ்கரில் கடந்தாண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, மஹ்தாரி வந்தனா யோஜனா (Mahtari Vandan Yojana) என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தின் பயனாளர்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி உள்ளது.

 

1 /8

நாட்டில் மகளிர் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சில மாநிலங்களில் மாதாமாதம் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதாமாதம் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் (Kalaignar Magalir Urimmai Thogai Scheme) கீழ் வழங்கப்படுகிறது.

2 /8

அதே போல், தற்போது பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் அரசு சார்பில் மஹ்தாரி வந்தனா யோஜனா (Mahtari Vandan Yojana) என்ற திட்டத்தின்கீழ் திருமணமான பெண்களு்ககு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

3 /8

இந்த திட்டத்தின் கீழ் பிரபல நடிகை சன்னி லியோன் (Sunny Leone) பெயரிலும் மாதாமாதம் ரூ.1000 ஒரு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

4 /8

வீரேந்திர ஜோஷி என்பவர் போலியாக சன்னி லியோன் பெயரில் கணக்கை தொடங்கி, அதனை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு எதிராக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

5 /8

வீரேந்திர ஜோஷியை மட்டுமின்றி, அந்த கணக்கை பரிசீலனை செய்து சரிபார்ப்பு மேற்கொண்ட அதிகாரிகளையும் கண்டறிந்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

6 /8

சத்தீஸ்கரில் (Chhattisgarh) உள்ள பாஸ்டர் பகுதியில் இருக்கும் தலூர் கிராமத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் ஹரீஷ், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையிடம் இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது மட்டுமின்றி, அந்த வங்கிக் கணக்கையும் முடக்க உத்தரவிட்டார்.   

7 /8

ஊடகங்களில் வெளியான தகவல்கள் மூலமே இந்த மோசடி குறித்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  தற்போது இந்த விவகாரம் ஆளுங்கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் பிரச்னையை கிளப்பியிருக்கிறது. 

8 /8

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தீபக் பைஜ் இதுகுறித்து கூறுகையில்,"மஹ்தாரி வந்தனா யோஜனா திட்டத்தில் இருக்கும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் போலியானவர்கள்தான்" என குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த துணை முதலமைச்சர் அருண் சோ,"சத்தீஸ்கரில் பெண்கள் தற்போது மாதந்தோறும் உதவித்தொகை பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது, ஏனென்றால் கடந்த கால ஆட்சியில் அவர்களால் இதை வழங்க முடியவில்லை அல்லவா..." என்றார்.