Oxygen cylinders: UKவில் இருந்து சென்னைக்கு வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்…

சென்னை: இங்கிலாந்தில் இருந்து 450 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது. மேலும் 450 வந்துக் கொண்டிருக்கிறது.

இந்திய விமானப்படை சி 17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் 450 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உட்பட 35 டன் அளவிலான உதவிப் பொருட்களுடன் இந்தியா வந்தடைந்தது. தலா 46.6 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்தது.

Also Read | அரசியலுக்கு தலைமுழுக்கு, குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பேன் 

1 /7

நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆக்ஸிஜன் நிறுவனம் 5000 சிலிண்டர் கொடுத்துள்ளது.  பிரிட்டிஷ் ஆக்ஸிஜன் நிறுவனம் (பிஓசி) சிலிண்டர்களை நன்கொடையாக வழங்கியது.    

2 /7

மே 2, ஞாயிற்றுக்கிழமையன்று ஜாம்நகர் விமானத் தளத்திலிருந்து பிரிட்டனில் உள்ள பிரைஸ் நார்டனுக்கு சென்ற விமானம் critical life support equipment கருவிகளை கொண்டு வந்தன.

3 /7

பிரமாண்டமான 4-எஞ்சின், டி-டெயில்ட் விமானம் சென்னையின் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாலை 5:15 மணிக்கு தரையிறங்கியது

4 /7

சென்னை சுங்க அதிகாரிகள் அரை மணி நேரத்திற்குள் ஆவண நடைமுறைகளை முடித்து சரக்குகளை அனுப்பி வைத்தனர்.  

5 /7

மேலும் 450 சிலிண்டர்கள் மற்றொரு ஐ.ஏ.எஃப் சி -17 போக்குவரத்து விமானம் மூலமாக சென்னைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 /7

“தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தோ-பிரிட்டிஷ் கூட்டாட்சியின் திறனைக் காட்டும் நடவடிக்கை இது. 450 ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொண்டு செல்லும் ஐ.ஏ.எஃப் விமானம் சென்னைக்கு (இந்தியா) வந்து சேர்கிறது. ஆதரவுக்கு இங்கிலாந்துக்கு நன்றி ”என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி ட்வீட் செய்துள்ளார்

7 /7

ஆக்ஸிஜன் கொள்கலன்கள், கிரையோஜெனிக் டேங்கர்கள், செறிவூட்டிகள் ஆகியவற்றை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாட்டிற்கு கொண்டு வருவதற்காக இந்திய விமானப்படை இடைவிடாமல் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக பிபிஇ கிட்கள், தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருட்கள், வென்டிலேட்டர்கள் போன்ற உதவிகளை பல உலக நாடுகள் இந்தியாவுக்கு வழங்கிவருகின்றன.