தலை அலங்காரத்தில் மலருக்கும் முக்கிய இடமுண்டு. அதிலும் தென்னிந்திய கலாச்சாரத்தில் மலர் இல்லாமல் தலை அலங்காரம் நிறைவுறுவதில்லை. மனம் மயக்கும் மணம் வீசும் மலர் அலங்காரங்கள் சில...
ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஆனால், ஒருவரை பார்க்கும் போது அவரது தலை எவ்வாறு வாரப்பட்டிருக்கிறது என்பதும் தோற்றத்திற்கு முக்கியமானதாகும். ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தலையை அழகாக ஸ்டைலாக வைத்திருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.
சாதாரண நாளிலே தலைக்கும், தலை அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும்போது, முக்கியமான விசேஷ காலத்தின் போது அனைவரும் நன்றாக ஆடையுடுத்தி சிறப்பாக தோற்றமளிக்க விரும்புவார்கள். தலை அலங்காரத்திலே மலருக்கு என்று ஒரு தனியிடம் உண்டு. அது மணம் தரும் மலராக மட்டுமே ஒரு காலத்தில் இருந்தது. தற்போது, விலையுயர்ந்த ஆபரணங்களும், வைரம், முத்து, தங்கம், ரத்தினக் கற்கள் மட்டுமல்ல, காகிதப் பூக்களும் தலையலங்காரத்தில் இடம் பிடித்துவிட்டன.
அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் பெண்களுக்கான தலையலங்காரம் மிக்வும் சிறப்பிடம் பெற்றது. இன்று நவீன காலத்தில் ஸ்டைலாக தலையலங்காரம் செய்துக் கொண்டாலும், குறைந்தபட்சம் குடும்பத்தில் நடைபெறும் திருமண விழாக்களில் பெண்கள் மலர் அலங்காரம், பூஜடை அலங்காரம் செய்துக் கொள்கின்றனர்.
முகத்தைப் பார்த்தால் தான் அழகு தெரியுமா என்ன? இந்த ஜடை அலங்காரங்களை பார்த்தாலே மணத்தால் மனம் மயங்கிவிடும். இதோ சில பூஜடை அலங்காரங்கள் உங்களுக்காக. பார்க்கும்போது மனம் மயக்கும் மணம் வீசும் மலர் அலங்காரங்கள்....
ஆடைக்கு ஏற்ற ஆபரணமாக பூச்சடை அலங்காரம்
இந்த நீல அலங்காரம் அசலான மலராலும், மலரில் வண்ணச்சாயம் பூசப்பட்டும் செய்யப்பட்டுள்ளது
இது மிகவும் எளிமையான மல்லி அலங்காரம்
இது தலை அலங்காரத்தில் மயில் அலங்காரம்
நவீன பாணியில் பாரம்பரிய ஜடை அலங்காரம்
பாரம்பரிய ஜடை அலங்காரம்
இது மலர் மற்றும் உலர் பழங்களால் செய்யப்பட்ட ஜடை அலங்காரம்
தலையை கனக்கச் செய்யும் பூ அலங்காரம்
தலையில் மட்டுமல்ல, சுவற்றுக்கும் அழகு சேர்க்கும் பூச்சடை
தலையில் தென்படும் இந்தியாவின் பிரத்யேக கலை அழகு