Kedar Yoga After 500 Years: ஜோதிட சாஸ்திரப்படி சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 23ஆம் தேதி கேதார யோகம் உருவாகப் போகிறது. ஜாதகத்தின் 4வது வீட்டில் 7 கிரகங்களும் அமையும் போது இந்த யோகம் ஏற்படுகிறது.
மங்களகரமானதாகக் கருதப்படும் கேதார யோகத்தால் திடீர் பண வரவு, முன்னேற்றம் ஏற்படும் ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கேதார யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
கேதார யோகத்தால் திடீர் பண வரவு, முன்னேற்றம் ஏற்படும்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, தனுசு ராசியின் மூன்றாவது, ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாவது வீட்டில் கேதார யோகம் உருவாகப் போகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த நேரம் முதலீடு, லாட்டரி, பங்கு சந்தை போன்றவற்றுக்கு மிகவும் சாதகமானது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த நேரத்தில் முடிவு உங்களுக்கு சாதகமாக வரும். மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும். துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக வேலை செய்வதற்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது. இந்தக் காலகட்டத்தில் கூட்டுப் பணிகளில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் வணிக வர்க்கம் அதிக லாபம் ஈட்டுவார்கள். வியாபாரத்தையும் விரிவுபடுத்தலாம்.
மேஷ ராசியினருக்கு சனி பதினொன்றாம் வீட்டில் இருக்கும்போது, திடீர் பண பலன்கள் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். புதிய வேலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.