கேஎல் ராகுலுக்கு தொடரும் சோகம்! அணியை விட்டு நீக்கும் லக்னோ!

கடந்த 2022ம் ஆண்டு லக்னோ அணியில் இணைந்த கேஎல் ராகுல் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அணு அவரை விடுவிக்க உள்ளது.

 

1 /6

இந்தியன் பிரீமியர் லீக் 2025 ஏலத்திற்கு முன்னதாக பல எதிர்பார்க்காத விஷயங்கள் நடைபெற உள்ளது. கேப்டன் கேஎல் ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸால் வெளியேற்றப்பட உள்ளார்.  

2 /6

கேஎல் ராகுல் சமீபகாலமாக சிறப்பாக விளையாடவில்லை. மேலும் இந்தியாவின் டி20 அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லக்னோ அணியும் அவரை நீக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

3 /6

அணிகள் எந்த எந்த வீரரை தக்க வைக்கிறார்கள் என்பதை அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இந்நிலையில் கேஎல் ராகுல் லக்னோ அணியில் தொடர மாட்டார் என்று கூறப்படுகிறது.  

4 /6

LSG அணியின் வழிகாட்டியான ஜாகீர் கான் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் நடத்திய ஆய்வில், ராகுல் விளையாடிய டாட் பந்துகளால் தோல்வி அதிகரித்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.  

5 /6

அதன்படி, கேப்டன் கேஎல் ராகுல் நீண்ட நேரம் பேட்டிங் செய்து ரன்கள் அடித்த அனைத்து போட்டிகளிலும் அணி கிட்டத்தட்ட தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அவர் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளனர்.  

6 /6

மயங்க் யாதவ், ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் போன்ற இளம் வீரர்களை லக்னோ அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.