நெட்ஃப்ளிக்ஸ் பயனாளர்களிடம் பணம் கொள்ளை!! உஷாரா இருங்க..

Latest News Netflix Scam : இந்தியாவில், பலர் நெட்ஃப்ளிக்ஸ் உபயோகிக்கின்றனர். இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஒரு ஸ்கேம் உலா வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம். 

Latest News Netflix Scam : பல திரைப்படங்களையும் வெப் தொடர்களையும் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் தளம், நெட்ஃப்ளிக்ஸ். இந்த தளத்தை பயன்படுத்துபவர்களை குறி வைத்து ஒரு ஏமாற்று கும்பல் தற்போது வலைவீச தொடங்கியிருக்கிறது. இது குறித்த தகவலையும், இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

1 /7

நெட்ஃப்ளிக்ஸ் பயணாளர்களை குறி வைத்து தற்போது ஒரு ஸ்கேம் உலா வர தொடங்கியிருக்கிறது. இந்த ஸ்கேமை 23 நாடுகளுக்கும் மேல் உள்ளவர்கள் சந்தித்திருக்கின்றனர். இதனால், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது பயணாளர்களுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

2 /7

நெட்ஃப்ளிக்ஸில் கணக்கு வைத்திருப்பவர்களிடம், அவசரமாக கிரெடிட் கார்ட் விவரங்களை கேட்டு, ஒரு மெயில் அனுப்பப்படுகிறது. இதைப்பற்றி தெரியாத பலர், தங்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து விட வாய்ப்புள்ளது. 

3 /7

இவர்கள், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அனுப்புவது போலவே அந்த மெயிலை அனுப்புகின்றனர். அதில், “கடைசியாக நீங்கள் செலுத்திய பணம் process ஆகவில்லை, மீண்டும் பணத்தை செலுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 

4 /7

இதை கண்டுபிடிப்பதற்கு, அந்த மெயிலில் ஏதேனும் எழுத்துப்பிழை அல்லது வார்த்தை பிழைகள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். 

5 /7

நெட்ஃப்ளிக்ஸ் பயணாளர்கள் இது போன்ற லிங்க் வந்தால் அதை தொடுவதை தவிர்க்கவும். 

6 /7

அப்படி உங்களுக்கு அனுப்பப்படும் லிங்குகள், உங்களை dark web அல்லது அதை விட மோசமான தளங்களுக்கு அழைத்து செல்லலாம். 

7 /7

இப்படிப்பட்ட மெசஜ் அல்லது மெயில் வந்தவர்கள் உடனடியாக இது குறித்து புகார் தெரிவிக்குமாறு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.