Shani Vakri 2023: நீதியின் கடவுளான சனிபகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார்.
சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக இரண்டரை வருடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. சனி பகவான் ஜனவரி மாதம் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சியானார். அவர் ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியிலேயே வக்ர பெயர்ச்சியடையப்போகிறார்.
கிரக மாற்றங்கள்: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது, அஸ்தமனமாகி உதயமாகிறது, வக்ரமாகி பின் வக்ர நிவர்த்தி அடைகிறது. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
கிரகங்களின் வக்ர பெயர்ச்சி: ஒரு கிரகம் வக்ரமாகும்போது, அதன் தாக்கம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த நிலையில் கிரகங்கள் எதிர் திசையில் நகரும். சனி பகவான் ஜூன் மாதம் வக்ரமாகி 139 நாட்களுக்கு வக்ர நிலையில் இருப்பார்.
ராசிகளில் தாக்கம்: சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் செல்வம் அபரிமிதமாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. அந்த ராசிகளை பற்றி காணலாம்.
மிதுனம்: சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில் வெளிநாட்டு பயணமும் செல்லலாம். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இந்த நேரம் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும்.
தனுசு: வக்ர சனி இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த காலத்தில் தைரியமும் வலிமையும் அதிகரிப்பதை உணருவீர்கள். மேலும், வெளிநாடுகளில் தொடர்புள்ளவர்களும் பயனடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர சஞ்சாரம் பலனளிக்கும். திடீர் பண பலன்களைப் பெறுவீர்கள். குழந்தைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் வரலாம். குழந்தை பாக்கியத்தை விரும்புபவர்களுக்கும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.