நீரிழிவு நோயாளிகளின் மிகப்பெரிய பிரச்சனை இரத்த சர்க்கரையின் ஏற்றத்தாழ்வு ஆகும். சர்க்கரையை கட்டுப்படுத்தவில்லை என்றால், கண்பார்வை இழப்பு சிறுநீரக குறைபாடு, போன்றவை அபாயம் உள்ளது.
நீரிழிவு நோய் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும். இதற்கு சிகிட்ச்சை ஏதும் இல்லை. இதனை கட்டுக்குள் வைப்பதே தீர்வாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க மருந்துகளை உட்கொள்வதுடன், ஆரோக்கியமான உணவையும் உட்கொள்வது அவசியம். இருப்பினும், உணவில் சில மாற்றங்களைச் செய்தால், சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, கோதுமை மாவில் சில மாவுகளை சேர்த்து செய்வது பலன் அளிக்கும்.
பெரும்பாலான வீடுகளில் கோதுமை மாவினால் செய்யப்படும் ரொட்டிகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம் அவற்றின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக அதிகமாக இருப்பதுதான். கார்போஹைட்ரேட் இதில் ஏராளமாக உள்ளது, இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, மாவில் சிறிது கடலை மாவு சேர்க்கவும். இது ரொட்டியில் புரதத்தின் அளவை அதிகரிக்கும். மேலும் இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
கோதுமை மாவுடன் பார்லி மாவையும் கலக்கலாம். நார்ச்சத்து இதில் ஏராளமாக உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. சர்க்கரை அளவையும் எளிதாகக் குறைக்கிறது. பார்லி மாவு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. எனவே, சப்பாத்திக்கு மாவை பிசையும் போது, அதில் சிறிது பார்லி மாவை கலக்கவும்.
கோதுமை மாவில் சிறிது ராகி மாவை கலந்து சப்பாத்தி செய்வதன் மூலம் உங்கள் சர்க்கரையின் அளவு எளிதில் கட்டுக்குள் இருக்கும். இது மட்டுமின்றி கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு ஆகியவை ராகியில் காணப்படுகின்றன. இது கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
அமர்நாத் மாவு என அழைக்கப்படும் தண்டுக் கீரையின் விதைகளின் மாவு அதிக புரதம் சத்து கொண்டுள்ளது. அமர்நாத், கோதுமையை விட அதிக அளவு புரதம் கொண்டுள்ளது. இதில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அதிகரிக்காமல் தடுக்கிறது.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.